சென்னை, புறநகரில் பலத்த காற்றுடன் கனமழை! சிலிண்டர் பிரச்னை தீர்ந்தது! கட்டுப்பாடுகளை நீக்கிய மத்திய அரசு!!ஒன்றிய அரசை இந்திய அரசு என மாற்றிய முதல்வர் விஜய்!எஸ்.பி. வேலுமணிக்கு அதிமுகவில் மீண்டும் பதவி!என்.எல்.சி. பங்குகள் விற்பனை! பிரதமருக்கு முதல்வர் விஜய் கடிதம்!
/

ஓடிடியில் வெளியானது பிளாஸ்ட்!

பிளாஸ்ட் திரைப்படத்தின் ஓடிடி வெளியீடு தொடர்பாக...

News image

பிளாஸ்ட் - படம்: எக்ஸ்

Updated On :25 ஜூன் 2026, 8:29 pm IST

நடிகர் அர்ஜுனின் பிளாஸ்ட் திரைப்படம் இன்று(ஜூன் 25) ஓடிடி தளத்தில் வெளியாகியுள்ளது.

அறிமுக இயக்குநர் சுபாஷ் கே ராஜ் இயக்கத்தில் ஆக்சன் பாணியில் எடுக்கப்பட்ட பிளாஸ்ட் திரைப்படம், கடந்த மே 28 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது.

நடிகர்கள் அர்ஜுன், அபிராமி, ப்ரீத்தி முகுந்தன் உள்ளிட்டோர் நடித்த இப்படத்திற்கு சிறப்பான வரவேற்பு கிடைத்ததால் அடுத்தடுத்த நாள்களில் டிக்கெட் விற்பனைகளும் அதிகரித்தன.

முழுமையான ஆக்சன் திரைப்படமாக உருவான இந்தப் படத்தில், கராத்தே தெரிந்த அர்ஜுன் குடும்பம் எப்படி வில்லன்களுடன் மோதுகிறார்கள் என்பதை மையப்படுத்தி விறுவிறுப்புடன் எடுக்கப்பட்டுள்ளது.

கே.ஜி.எஃப். படத்துக்கு இசையமைத்த ரவி பஸ்ரூர், பிளாஸ்ட் படத்தின் மூலம் தமிழில் இசையமைப்பாளராக அறிமுகமாகியுள்ளார்.

இந்த நிலையில், பிளாஸ்ட் திரைப்படம் நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் காணக் கிடைக்கிறது.

Summary

Actor Arjun's film Blast has been released on an OTT platform today (June 25).

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.