மும்பை பங்குச் சந்தையில் வியாழக்கிழமை நடைபெற்ற வர்த்தகத்தில் எழுச்சி காணப்பட்டது. சென்செக்ஸ் குறியீட்டில் 407 புள்ளிகள் உயர்ந்து 18,312 என்ற அளவில் முடிவுற்றது.
கடந்த நான்கு நாட்களில் பங்குச் சந்தையில் ஒட்டுமொத்தமாக 1,400 புள்ளிகள் வீழ்ச்சி அடைந்திருந்தது. கடந்த ஜூன் மாதம் 28-ஆம் தேதி ஒரே நாளில் 519 புள்ளிகள் உயர்வுபெற்றதை தொடர்ந்து, வியாழக்கிழமை சென்செக்ஸில் ஏற்பட்ட 407 புள்ளி உயர்வுதான் மிக அதிகமாகும். உலகில் அதிக அளவில் உலோகங்களைப் பயன்படுத்தும் நாடான சீவியாழக்கிழமை பங்குச் சந்தை பெற்ற எழுச்சி மூலம் முதலீட்டாளர்கள் ஒட்டுமொத்தமாக ரூ. 1.17 லட்சம் கோடி லாபம் பெற்றனர் என்று தெரிகிறது.
முப்பது முக்கிய நிறுவனங்களின் பங்கு விலைப்பட்டியலான சென்செக்ஸில் 28 நிறுவனங்களின் பங்குகள் லாபம் பெற்றன என்பது குறிப்பிடத்தகுந்தது. ஹிண்டால்கோ பங்கு விலை அதிகபட்சமாக ஏறத்தாழ 11 சதவீதம் அதிகரித்தது. ஸ்டெர்லைட், டாடா ஸ்டீல், ஓ.என்.ஜி.சி. ஆகியவற்றின் பங்குகளும் நல்ல லாபம் பெற்றன. உலோக நிறுவனங்களின் பங்கு விலை சராசரியாக 8 சதவீதம் உயர்ந்தது.
ஐ.டி.சி., ரிலையன்ஸ் இண்ட்ஸ்டிரீஸ், ஓ.என்.ஜி.சி., டாடா கன்ஸல்டன்ஸி சர்வீஸஸ் ஆகியவற்றின் பங்கு விலை உயர்வு மட்டுமே சென்செக்ஸ் குறியீடில் 184 புள்ளி எழுச்சிக்கு காரணமாயிற்று.தேசிய பங்குச் சந்தையில் வியாழக்கிழமை நடைபெற்ற வர்த்தகத்தில் 105 புள்ளிகள் உயர்வு பெற்று நிஃப்டி குறியீடு 5,408 என்ற அளவில் நிலைத்தது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

தொடக்க ஆட்டக்காரராக ரோஹித் சர்மா புதிய சாதனை!

இன்றைய செய்திகள் ஜூன் 14 - நேரலை!

8 கோல்களைத் தடுத்த கோல்கீப்பர்: 24 ஆண்டுகளுக்குப் பிறகு வந்த துருக்கிக்கு அதிர்ச்சியளித்த ஆஸ்திரேலியா!

பாஜக கூட்டணியில் இருந்து வெளியேறியது தமாக!
விடியோக்கள்

”முதல்வர் விஜய்க்கு எந்த பயிற்சியும் தேவையில்லை”: அமைச்சர் ராஜ்மோகன் | TVK

2 வயது குழந்தைக்கு நல்லது கெட்டது தெரியாது!: துரை வைகோ பேட்டி

மின்வெட்டு பிரச்னையில் தவெக அரசு செய்வது என்ன?: சிஐடியு ஜெயசங்கர் | Power Outage |



