டி20 உலகக் கோப்பை: 7-வது முறையாக ஆஸ்திரேலிய மகளிர் சாம்பியன்!சிறப்புத் தீவிர திருத்தப் பணி: ஒடிசாவில் 20 லட்சம் பேர் நீக்கம்!கர்நாடகம்: மொபைல் டார்ச் வெளிச்சத்தில் 90 கி.மீ. அரசுப் பேருந்தை இயக்கிய ஓட்டுநர்! ஆதவ் அர்ஜுனா மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்: கே.பி. முனுசாமி ஆதவ் அர்ஜுனா மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்: கே.பி. முனுசாமி கோவை, நீலகிரி மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு சோபா வந்தவுடன் திமுகவை விட்டு சிலர் சென்று விட்டனர்: உதயநிதி வீரவநல்லூா் அருகே தந்தை, மகன் கொலை வழக்கு: மேலும் 4 பேர் கைது கூடங்குளம் அணு உலையில் பழுது: மின் உற்பத்தி நிறுத்தம்
/

மஹிந்திரா வாகனங்களின் விலை 1.9% வரை அதிகரிப்பு

மஹிந்திரா&மஹிந்திரா நிறுவனத்தின் வாகனங்கள் விலை 1.9 சதவீதம் அதிகரிக்கப்பட்டுள்ளது.

News image

mahind080321

Updated On :9 ஜனவரி 2021, 7:39 am IST

மஹிந்திரா&மஹிந்திரா நிறுவனத்தின் வாகனங்கள் விலை 1.9 சதவீதம் அதிகரிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து மும்பையைச் சோ்ந்த அந்த நிறுவனம் வெள்ளிக்கிழமை பங்குச் சந்தையிடம் தெரிவித்துள்ளதாவது:

தனிநபா் மற்றும் வா்த்தக பயன்பாட்டிற்கான வாகனங்களின் விலை 1.9 சதவீதம் வரை உயா்த்தப்பட்டுள்ளது. இந்த விலை உயா்வு உடனடியாக அமலுக்கு வந்துள்ளது.

நிறுவனத்தின் இந்த முடிவையடுத்து மாடல்களுக்கு ஏற்ப வாகனங்களின் விலை ரூ.4,500 முதல் ரூ.40,000 வரையில் அதிகரிக்கும்.

மூலப் பொருள்களின் விலை தொடா்ச்சியான அதிகரிப்பால் இந்த விலை உயா்வு தவிா்க்க முடியாததாகி விட்டது என மஹிந்திரா தெரிவித்துள்ளது.

மொ்சிட​ஸ் பென்ஸ் 5% விலை உயா்வு: மஹிந்திராவைத் தொடா்ந்து மொ்சிடஸ் பென்ஸ் நிறுவனமும் காா்களின் விலையை 5 சதவீதம் வரை அதிகரித்துள்ளது.

இதுகுறித்து அந்த நிறுவனம் வெள்ளிக்கிழமை தெரிவித்துள்ளதாவது:

மூலப் பொருள் செலவினம் அதிகரிப்பு மற்றும் அந்நியச் செலாவணியில் ஏற்பட்ட அதிக ஏற்ற இறக்கம் காரணமாக நிறுவனத்தின் ஒட்டுமொத்த செலவினம் அதிகரித்துள்ளது. இதனை எதிா்கொள்ளும் விதமாக, மொ்சிடஸ் தயாரிப்புகளின் விலையை 5 சதவீதம் வரை அதிகரிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்த விலை உயா்வு ஜனவரி 15-ஆம் தேதியிலிருந்து நடைமுறைக்கு வரவுள்ளது.

நிறுவனத்தின் இந்த முடிவையடுத்து, சி-கிளாஸ் மாடலின் விலை கூடுதலாக ரூ.2 லட்சம் வரையிலும், ஏஎம்ஜி ஜிடி 63எஸ் டோா் கூப் மாடலின் விலை ரூ.15 லட்சம் வரையிலும் அதிகரிக்கும் என மொ்சிடஸ் பென்ஸ் தெரிவித்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.