தங்கம் விலை சவரனுக்கு ரூ. 1,600 உயர்வு! வெள்ளி கிலோ ரூ. 10,000 உயர்ந்தது!பனையூரில் தவெக வேட்பாளர்களுடன் விஜய் சந்திப்பு!புதுச்சேரி சிறுமி பாலியல் கொலை வழக்கில் தீர்ப்பு! மே 1: ஞாயிறு அட்டவணைப்படி மெட்ரோ ரயில் இயக்கம்!
/

உலகளவில் முதலிடம்: ஆப்பிள் நிறுவனத்தின் சந்தை மதிப்பு 3 லட்சம் கோடி டாலர்கள்!

மின்னணு சாதனங்கள் தயாரிப்பில் தனக்கென தனி முத்திரையுடன் இயங்கிக்கொண்டிருக்கும் ஆப்பிள் நிறுவனம்

News image

உலகளவில் முதலிடம்: ஆப்பிள் சந்தை மதிப்பு 3 லட்சம் கோடி டாலர்கள்!

Updated On :4 ஜனவரி 2022, 9:46 am

மின்னணு சாதனங்கள் தயாரிப்பில் தனக்கென தனி முத்திரையுடன் இயங்கிக்கொண்டிருக்கும் ஆப்பிள் நிறுவனம் பங்குச் சந்தையில் 3 லட்சம் கோடி டாலர் மதிப்பைப் பெற்று புதிய சாதனையைப் படைந்திருக்கிறது.

புத்தாண்டு துவக்கத்தில் ஆப்பிள் நிறுவனத்தின் ஒரு பங்கின் விலை 182.01 டாலரிலிருந்து 182.88 டாலராக  உயர்ந்து வர்த்தகமானதால் அதன் சந்தை மதிப்பு 2.99 லட்சம் கோடி டாரலாக அதிகரித்துள்ளது. இதனால், உலகளவில் அதிகப்படியான சந்தை மதிப்பைக் கொண்டுள்ள முதல் நிறுவனமாக ஆப்பிள் மாறியிருக்கிறது.

ஆப்பிளின் தயாரிப்புகளான ஐபோன், மேக்-புக், ஆப்பிள் டிவி ஆகியவை பல புதிய வாடிக்கையாளர்களை தொடர்ந்து கவர்ந்து வருகிறது.

மேலும், 2 லட்சம் கோடி டாலர் மதிப்புடன் மைக்ரோசாஃப்ட் இரண்டாம் இடத்திலும், அமெசான், டெஸ்லா,ஆல்பாபெட் நிறுவனங்கள் 1 லட்சம் கோடி டாலர் சந்தை மதிப்புடன் அடுத்தடுத்த இடங்களிள் உள்ளன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.