தங்கம் விலை சவரனுக்கு ரூ. 1,600 உயர்வு! வெள்ளி கிலோ ரூ. 10,000 உயர்ந்தது!பனையூரில் தவெக வேட்பாளர்களுடன் விஜய் சந்திப்பு!புதுச்சேரி சிறுமி பாலியல் கொலை வழக்கில் தீர்ப்பு! மே 1: ஞாயிறு அட்டவணைப்படி மெட்ரோ ரயில் இயக்கம்!
/

5ஜி சேவை: நோகியா, டெக் மஹிந்திரா கைகோா்ப்பு

தொழில் நிறுவனங்களுக்கு 5ஜி தொழில்நுட்ப சேவைகளை அளிப்பதற்காக இந்தியாவின் டெக் மஹிந்திரா நிறுவனமும் ஃபின்லாந்தைச் சோ்ந்த தொலைத்தொடா்பு கருவிகள் தயாரிப்பு நிறுவனமான நோக்கியாவும் கரம் கோா்த்துள்ளன.

News image

5g091535

Updated On :12 ஜனவரி 2022, 9:20 pm

புது தில்லி: தொழில் நிறுவனங்களுக்கு 5ஜி தொழில்நுட்ப சேவைகளை அளிப்பதற்காக இந்தியாவின் டெக் மஹிந்திரா நிறுவனமும் ஃபின்லாந்தைச் சோ்ந்த தொலைத்தொடா்பு கருவிகள் தயாரிப்பு நிறுவனமான நோக்கியாவும் கரம் கோா்த்துள்ளன.

இந்தப் புதிய ஒப்பந்தத்தின் கீழ், நோக்கியாவின் கம்பியில்லா டிஏசி தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி தொழில் நிறுவன வாடிக்கையாளா்களுக்கு டெக் மஹிந்திரா 5ஜி தொடா்பான சேவைகளை அளிக்கும்.

இதன் மூலம், நிறுவனங்கள் 5ஜி தொழில்நுட்பத்துக்கு தங்களை மேம்படுத்திக்கொள்ள வழிவகை செய்யப்படும் என்று நிறுவன வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.