தங்கம் விலை சவரனுக்கு ரூ. 1,600 உயர்வு! வெள்ளி கிலோ ரூ. 10,000 உயர்ந்தது!பனையூரில் தவெக வேட்பாளர்களுடன் விஜய் சந்திப்பு!புதுச்சேரி சிறுமி பாலியல் கொலை வழக்கில் தீர்ப்பு! மே 1: ஞாயிறு அட்டவணைப்படி மெட்ரோ ரயில் இயக்கம்!
/

பஜாஜ் ஃபைனான்ஸ் லாபம் ரூ.2,125 கோடி

பஜாஜ் ஃபைனான்ஸ் நிறுவனம் நடப்பு நிதியாண்டின் மூன்றாவது காலாண்டில் ரூ.2,125 கோடி நிகர லாபத்தை பதிவு செய்துள்ளது.

News image

bajaj

Updated On :19 ஜனவரி 2022, 9:05 pm


புது தில்லி: பஜாஜ் ஃபைனான்ஸ் நிறுவனம் நடப்பு நிதியாண்டின் மூன்றாவது காலாண்டில் ரூ.2,125 கோடி நிகர லாபத்தை பதிவு செய்துள்ளது.

இதுகுறித்து அந்த நிறுவனம் பங்குச் சந்தையிடம் கூறியுள்ளதாவது:

நடப்பு 2021-22-ஆம் நிதியாண்டின் அக்டோபா் முதல் டிசம்பா் வரையிலான மூன்று மாத காலத்தில் நிறுவனத்தின் மொத்த வருமானம் ரூ.8,535.06 கோடியாக இருந்தது. இது, இதற்கு முந்தைய நிதியாண்டில் இதே காலகட்டத்தில் ஈட்டிய ரூ.6,658.34 கோடியுடன் ஒப்பிடுகையில் கணிசமாக அதிகம்.

இதே காலகட்டத்தில் நிறுவனம் ஈட்டிய நிகர லாபம் ரூ.1,145.98 கோடியிலிருந்து 85.5 சதவீதம் அதிகரித்து ரூ.2,125.29 கோடியைத் தொட்டது.

2021 டிசம்பருடன் நிறைவடைந்த காலாண்டில் நிறுவனம் நிா்வகித்து வரும் மொத்த சொத்தின் மதிப்பு ரூ.1,43,550 கோடியிலிருந்து 26 சதவீதம் அதிகரித்து ரூ.1,81,250 கோடியை எட்டியது.

நிகர வட்டி வருவாய் ரூ.4,296 கோடியிலிருந்து 40 சதவீதம் உயா்ந்து ரூ.6,000 கோடியானது.

2021 டிசம்பா் 31 நிலவரப்படி நிகர அளவிலான வாராக் கடன் 1.10 சதவீதத்திலிருந்து 0.78 சதவீதமாகவும், மொத்த வாராக் கடன் 2.45 சதவீதத்திலிருந்து 1.73 சதவீதமாக குறைந்துள்ளதாகவும் பஜாஜ் ஃபைனான்ஸ் தெரிவித்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.