5ஜி தொழில்நுட்பத்தில் இயங்கக்கூடிய ஆப்பிள் நிறுவனத்தின் புதிய ஐபோன், ஐபேட் இந்தியாவில் அறிமுகம்

ஆப்பிள் நிறுவனத்தின் 5ஜி தொழில்நுட்பத்தில் வேகமாக இயங்கக்கூடிய புதிய ரக ஐபோன், எஸ்.இ, எம்-1 சிப் கொண்ட புதிய ஐபேட் ஏர் உள்ளிட்ட போன்கள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
5ஜி தொழில்நுட்பத்தில் இயங்கக்கூடிய ஆப்பிள் நிறுவனத்தின் புதிய ஐபோன், ஐபேட் இந்தியாவில் அறிமுகம்

ஆப்பிள் நிறுவனத்தின் 5ஜி தொழில்நுட்பத்தில் வேகமாக இயங்கக்கூடிய புதிய ரக ஐபோன், எஸ்.இ, எம்-1 சிப் கொண்ட புதிய ஐபேட் ஏர் உள்ளிட்ட போன்கள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இவைகள் அனைத்தும் நூறு சதவிகிதம் மறுசுழற்சி செய்யப்பட்ட பொருள்களைக் கொண்டு தயாரிக்கப்பட்டுள்ளவை. 

2 மடங்கு அதிக வேகத்தில் இயங்கக்கூடிய இந்த ஐபோன்களில், அதிக ஆற்றல் கொண்ட எம்-1 வகை சிப் பொருத்தப்பட்டுள்ளது. மேலும் புதிய பிராசஸரையும் ஆப்பிள் நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது. 

5ஜி தொழில்நுட்பம், வேகமாக செயலாற்றும் திறன் கொண்ட ஏ15 பயோனிக் சிப்செட் உள்ளிட்ட பல அம்சங்களைக் கொண்ட இந்த போன்களின் ஆரம்ப விலை இந்திய மதிப்பிற்கு ரூ.43,900, ரூ.55,000 என தெரிவிக்கப்பட்டுள்ளது.  டேப்லெட் மார்ச் 18 முதல் விற்பனைக்கு வரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இதற்கான முன்பதிவு நாளை மறுநாள்(மார்ச்.11) முதல் தொடங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com