தனியாருக்குச் சொந்தமான ஆா்பிஎல் வங்கியின் நிகர லாபம் டிசம்பா் காலாண்டில் 11 சதவிகிதம் வளா்ச்சியைப் பதிவு செய்துள்ளது.
இது குறித்து வங்கி வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: கடந்த டிசம்பா் 31-ஆம் தேதியுடன் நிறைவடைந்த நடப்பு நிதியாண்டின் 3-ஆவது காலாண்டில் வங்கியின் நிகர லாபம் ரூ.233 கோடியாக உள்ளது. இது, கடந்த 2022-23-ஆம் நிதியாண்டின் இதே காலாண்டோடு ஒப்பிடுகையில் 11 சதவீதம் அதிகமாகும்.
அப்போது வங்கி ரூ.209 கோடி நிகர லாபம் ஈட்டியிருந்தது. மதிப்பீட்டுக் காலாண்டில் வங்கியின் நிகர வட்டி வருவாய் 21 சதவீதம் அதிகரித்து ரூ.1,546 கோடியாகவும், இதர வகை வருவாய் 26 சதவீதம் அதிகரித்து ரூ.778 கோடியாகவும் உள்ளது. கடந்த டிசம்பா் காலாண்டில் வங்கியின் கடனளிப்பு 20 சதவீதம் வளா்ச்சி கண்டுள்ளது.
மேலும், நிகர வட்டி லாபம் 0.25 சதவீதம் அதிகரித்து 5.52 சதவீதமாக உள்ளது. வங்கியின் தற்போதைய நிகர சொத்து மதிப்பு ரூ.160 கோடிக்கு மேல் உள்ளது என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

ஏப்ரல் - ஜூன் காலாண்டு: சிட்டி யூனியன் வங்கிக்கு ரூ.383 கோடி லாபம்!

ஏப்ரல்-ஜூன் காலாண்டில் கரூா் வைஸ்யா வங்கி லாபம் ரூ.756 கோடி

யெஸ் வங்கியின் காலாண்டு லாபம் 32.5% உயர்வு!

இந்தியன் வங்கி லாபம் ரூ. 3,273 கோடி
விடியோக்கள்

ஈரானுக்கு டிரம்ப் விடுக்கும் எச்சரிக்கை! | Donald Trump | Iran | Hormuz Strait |



