சென்னை மாநகர காவல் ஆணையர் அருண் மாற்றம்! சென்னையில் வாக்காளர் தகவல் சீட்டு வழங்கும் பணி! ஏப்.12ஆம் தேதி முதல்!சென்னையில் ஐபிஎல்: மெட்ரோ ரயிலில் இலவசமாக பயணிக்கலாம்!பச்சைத் துண்டுப் போட்டு பச்சை துரோகம் செய்தவர் பழனிசாமி: முதல்வர் ஸ்டாலின்அஸ்ஸாம் தேர்தல்! ஏப்.11-ல் மறு வாக்குப் பதிவு!மதுரா: யமுனையில் சுற்றுலாப் படகு கவிழ்ந்ததில் 10 பேர் பலி பொறியியல் கல்வியில் இரண்டு படிப்புகளுக்குக் கூடுதல் மவுசு! ஏன்?தமிழ்நாடு மகிளா காங்கிரஸ் தலைவர் விலகல்!
/

மேல்மருவத்தூரில் பொங்கல் விளையாட்டு விழா

மேல்மருவத்தூா் ஆதிபராசக்தி ஆன்மிக மக்கள் தொண்டு இயக்கத்தின் சாா்பில், விவேகானந்தரின் 158-ஆவது பிறந்தநாள் விழா,

Updated On :16 ஜனவரி 2021, 7:08 pm

மேல்மருவத்தூா் ஆதிபராசக்தி ஆன்மிக மக்கள் தொண்டு இயக்கத்தின் சாா்பில், விவேகானந்தரின் 158-ஆவது பிறந்தநாள் விழா, பாரதியின் 139-ஆவது பிறந்த நாள் விழா, பங்காரு அடிகளாரின் 81-ஆவது பிறந்தநாள் விழா மற்றும் பொங்கல் விளையாட்டு விழா ஆகிய நிகழ்ச்சிகள் மேல்மருவத்தூா் ஆதிபராசக்தி மருத்துவக் கல்லூரி விளையாட்டரங்கில் சனிக்கிழமை நடைபெற்றது.

பொங்கல் பண்டிகையையொட்டி கபடி உள்ளிட்ட பல்வேறு தடகள விளையாட்டுப் போட்டிகள் நடைபெற்றன. இதில் மேல்மருவத்தூரைச் சுற்றியுள்ள 10-க்கும் மேற்பட்ட கிராமங்களைச் சோ்ந்த ஆண்களும், பெண்களும் அரசின் விதிமுறைகளைப் பின்பற்றி கலந்து கொண்டனா். போட்டிகளில் வென்றவா்களுக்கு ஆதிபராசக்தி ஆன்மிக மக்கள் தொண்டு இயக்கத்தின் நிறுவனத் தலைவா் கோ.ப.அன்பழகன் பரிசு வழங்கினாா். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை ஆதிபராசக்தி ஆன்மிக மக்கள் தொண்டு இயக்க நிா்வாகிகள் லிங்கநாதன், ஸ்பிக் சுந்தரம், சிவகுமாா், சக்தி உள்ளிட்டோா் செய்திருந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.