விராலிமலை தொகுதி காலியானதாக அறிவிப்பு! 6 தொகுதிகளுக்கு இடைத்தேர்தல்!4 தொகுதிகளில் இடைத்தேர்தலுக்கு தடை விதிக்க உயர் நீதிமன்றம் மறுப்பு! முதல்வர் விஜய்யைச் சந்திக்கிறார் வைகோ!கோயில்களில் பூஜைப் பொருள்கள் விலை பட்டியல் கட்டாயம்! அமைச்சர் ரமேஷ் உத்தரவு!காவல் மரணமடைந்த ஆகாஷின் உடல் 102 நாள்களுக்குப் பிறகு தகனம்!தங்கம் விலை சவரனுக்கு இன்று ரூ. 240 குறைவு!மெஸ்ஸி ஹாட்ரிக்... வெற்றியுடன் தொடங்கியது ஆர்ஜென்டீனா!புதுச்சேரி அமைச்சரவை விரிவாக்கம்: மேலும் 3 அமைச்சர்கள் பதவியேற்பு!இன்று தினமணி ‘மாணவா் மலா்’ அறிமுக விழா: அமைச்சா் விஸ்வநாதன் பங்கேற்பு எல் நினோ-வால் தமிழகத்துக்கு கடும் பாதிப்பு: மத்திய வேளாண் அமைச்சா் உ.பி., குஜராத் உள்பட 13 மாநிலங்களில் வருவாய் உபரி: சிஏஜி கச்சா எண்ணெய், எரிவாயு விலை: போருக்கு முந்தைய நிலையை எட்ட பல மாதங்கள் ஆகும்- நிபுணா்கள் தகவல் ஹைதராபாத் சாலைக்கு டிரம்ப் பெயா்! தெலங்கானா காங்கிரஸ் அரசு முடிவு மே மாதத்தில் மொத்த விற்பனை பணவீக்கம் 9.68%
/

பி.எஸ்.என்.எல். வாடிக்கையாளர்களுக்கு சலுகை அளிக்கும் "நம்பிக்கைத் திட்டம்'

தொலைபேசி மற்றும் அகண்ட அலைவரிசை திட்டத்தை அதிகம் பயன்படுத்தும் வாடிக்கையாளரகளுக்கு சலுகை அளிக்கும்

Updated On :22 மே 2013, 4:29 am IST

தொலைபேசி மற்றும் அகண்ட அலைவரிசை திட்டத்தை அதிகம் பயன்படுத்தும் வாடிக்கையாளரகளுக்கு சலுகை அளிக்கும் "நம்பிக்கைத் திட்டம்' என்ற புதிய திட்டத்தை பி.எஸ்.என்.எல். அறிமுகம் செய்துள்ளது.

கடந்த ஏப்ரல் மாதம் முதல் அறிமுகம் செய்யப்பட்டுள்ள இந்தத் திட்டத்தின்படி, மாதம் ரூ.400 கட்டண அளவுக்கு அதிகமாகவும், இரு மாதத்துக்கு ரூ.800 கட்டணத்துக்கு அதிகமாகவும் தொலைபேசி (லேண்ட் லைன்) மற்றும் அகண்ட அலைவரிசை (பிராட் பேண்ட்) திட்டங்களை பயன்படுத்தும் வாடிக்கையாளர்களுக்கு சலுகைப் புள்ளி அளிக்கப்படும்.

இந்தப் புள்ளிகளைப் பெற ஆரம்பித்து, 6 மாதத்துக்குப் பின்னர் சலுகையை வாடிக்கையாளர் அனுபவிக்க முடியும். அதாவது ஒரு புள்ளிக்கு ஒரு அழைப்பு (இணைய அழைப்புகளுக்கு மட்டும்) இலவசமாக அளிக்கப்படும்.

வாடிக்கையாளர்கள் குறைந்தபட்சம் 25 புள்ளிகளை அல்லது அதிகபட்சம் 500 புள்ளிகளைப் பெற்ற பிறகு, வாடிக்கையாளர் சேவை மையத்துக்கு நேரடியாகச் சென்றோ அல்லது 1500 என்ற எண்ணைத் தொடர்புகொண்டோ புள்ளிகளை சமர்ப்பித்து சலுகையைப் பெற்றுக் கொள்ளலாம். அல்லது, ஆன்-லைன் மூலம் பதிவு செய்தும் சலுகையைப் பெறலாம் என பி.எஸ்.என்.எல். தெரிவித்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.