செங்கல்பட்டு மேலமையூர் ஏரியில் மர்மநபர்களால் இளைஞர் வெட்டிக் கொலை செய்யப்பட்டு இறந்து கிடந்தார்.
செங்கல்பட்டை அடுத்த வல்லம் கிராமத்தைச் சேர்ந்த மணியின் மகன் சக்திவேல் (26). இவர் எலக்ட்ரீஷியனாக வேலைப் பார்த்து வந்தார்.
இவர் சனிக்கிழமை வெளியில் சென்றவர் வீடு திரும்பவில்லை. இந்நிலையில் ஞாயிற்றுக்கிழமை காலையில் மேலையூரில் ஒருவர் வெட்டிக் கொலை செய்யப்பட்டு இறந்து கிடப்பதாக அப்பகுதி மக்கள் செங்கல்பட்டு தாலுக்கா காவல் நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனர்.
தகவலை அடுத்த போலீஸ் எஸ்.பி. விஜயகுமார் தலைமையில் போலீஸார் சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை செய்தனர். கொலை செய்யப்பட்டு கிடந்த இளைஞர் வல்லம் பகுதியைச் சேர்ந்த சக்திவேல் என்பது தெரியவந்தது.
இச்சம்பவம் குறித்து செங்கல்பட்டு தாலுக்கா போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற் கொண்டுள்ளனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
பிணைக் கைதியாக நிற்கும் உலகம்!

நாகர்கோவில்! சளைக்காமல் களமாடும் திமுக - பாஜக!

தொகுதி அலசல்... அணைக்கட்டு: கடும் போட்டியில் திமுக - அதிமுக!

உடுமலை! ஹாட்ரிக் முனைப்பில் அதிமுக வெற்றி வேட்கையில் திமுக!
வீடியோக்கள்

காட்ஸ் அண்ட் சோல்ஜர்ஸ் டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

டார்லிங் மறுவெளியீட்டு டிரைலர்!
தினமணி செய்திச் சேவை

சிஎஸ்கேவின் பாதை, இனி சிங்கப் பாதை! | Chennai Super Kings | CSK | Sanju Samson |
தினமணி செய்திச் சேவை

கேரவனிலிருந்து நேராக கோட்டையா?: பொரிந்து தள்ளிய சரத்குமார் | Sarathkumar | TVK Vijay | #tvkcampaign
தினமணி செய்திச் சேவை

