ராயப்பேட்டை பகுதியில் குடிபோதையில் தண்ணீர் தொட்டியில் விழுந்தவர் சனிக்கிழமை இரவு உயிரிழந்தார்.
இது குறித்து போலீஸார் தரப்பில் தெரிவித்தது: ராயப்பேட்டை எல்.ஜி.என். சாலையில் வசித்து வந்தவர் ரவி (40). இவர் கார்களுக்கு பெயிண்ட் அடிக்கும் வேலை செய்து வந்தார்.
வழக்கம்போல் சனிக்கிழமை பணிக்குச் சென்ற ரவி வீடு திரும்பவில்லையாம். இது குறித்து காவல் நிலையத்தில் புகார் தெரிவிக்கப்பட்டது. இந்த நிலையில், ராயப்பேட்டை பகுதியில் உள்ள மெலடி திரையரங்கம் பின்புறம் உள்ள ஒரு தண்ணீர் தொட்டியில் ரவி இறந்து கிடந்தார்.
அவரது உடலை மீட்ட போலீஸார், பிரேத பரிசோதனைக்காக ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
ரவி விழுந்த தொட்டி பயன்பாட்டில் இல்லாமல் இருந்தது. அந்தத் தொட்டி 10 அடி ஆழமுடையது.
சனிக்கிழமை மாலை 5.30 மணியளவில் குடிபோதையில் அந்தப் பகுதியில் ரவி சுற்றித் திரிந்ததை பார்த்ததாக அப்பகுதியினர் தெரிவித்தனர்.
போதையில் இருந்த ரவி, திறந்திருந்த தொட்டியில் விழுந்திருக்கலாம் என போலீஸார் சந்தேகிக்கின்றனர்.
இது குறித்து வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருவதாக போலீஸார் தெரிவித்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.









