ஆமை புகுந்த வீடு போல, பாஜக புகுந்த நாடு உருப்படாது: ப. சிதம்பரம்எந்த வடிவிலும் தமிழ்நாட்டிற்குள் பாஜக வர முடியாது! மு.க. ஸ்டாலின்இவிஎம்-ல் வேட்பாளர்களின் பெயர்கள், சின்னங்கள் பொருத்தும் பணி ஏப். 16-ல் தொடக்கம்!நெல் குவிண்டாலுக்கு ரூ. 3,500; கரும்பு டன் ஒன்றுக்கு ரூ. 4,500 வழங்கப்படும்: விஜய் வாக்குறுதி விவசாய தொழிலாளர்களுக்கு ஆண்டுக்கு ரூ.10,000 : விஜய்தவெக பிரசாரத்தில் மயங்கிய சூலூர் வேட்பாளர்! 7 பெண்கள் மயக்கம்!முதல்வர் பதவியை ராஜிநாமா செய்தார் நிதீஷ் குமார்!பெண்களுக்கு 33% இடஒதுக்கீடு: மு.க. ஸ்டாலினால் பொறுக்க முடியவில்லை - இபிஎஸ்விஜய் பிரசாரம்! பெருமாநல்லூரில் தடுப்புகள் அமைத்து காவலர்கள் தீவிர பாதுகாப்பு!
/

குறும்படம் மூலம் "டவுன்ஸ் சின்ட்ரோம்' பாதிப்பு விழிப்புணர்வு

அறிவுத் திறன் குறைபாடுடைய ("டவுன்ஸ் சின்ட்ரோம்' பாதிப்பு) ஏழு குழந்தைகளைக் கொண்டு, பாதிப்பு குறித்த விழிப்புணர்வு குறும் படத்தை "தமிழ்நாடு டவுன்ஸ் சின்ட்ரோம்' சங்கம் தயாரித்துள்ளது.

News image
Updated On :21 ஜூலை 2013, 11:46 pm

அறிவுத் திறன் குறைபாடுடைய ("டவுன்ஸ் சின்ட்ரோம்' பாதிப்பு) ஏழு குழந்தைகளைக் கொண்டு, பாதிப்பு குறித்த விழிப்புணர்வு குறும் படத்தை "தமிழ்நாடு டவுன்ஸ் சின்ட்ரோம்' சங்கம் தயாரித்துள்ளது.

"இன்டெளிபில்' எனப் பெயரிடப்பட்டு, அறிவுத்திறன் குறைபாடுடைய ஏழு குழந்தைகளின் இயல்பான திறனை வெளிப்படுத்தி அவர்களைக் கௌரவிக்கும் வகையில் ஒரு

மணி நேர குறும் படம் தயாரிக்கப்பட்டுள்ளது. இந்தக் குறும் படம் செய்தியாளர்களுக்கு ஞாயிற்றுக்கிழமை திரையிட்டுக் காண்பிக்கப்பட்டது.

ஆவணப் படங்களை இயக்குவதில் சிறந்து விளங்கும் பெங்களூரைச் சேர்ந்த இயக்குநர் பவித்ரா சலம், இந்தக் குறும் படத்தை இயக்கியுள்ளார். தமிழ்நாடு டவுன்ஸ் சின்ட்ரோம் சங்கத்தின் தலைவர் சுரேகா ராமச்சந்திரனின் மகள் பாப்லி உள்பட 7 பேர் இந்த குறும் படத்தில் இடம்பெற்றுள்ளனர்.

""டவுன்ஸ் சின்ட்ரோம் பாதிப்பு குறித்து இதுவரை பல குறும் படங்கள் வெளியாகியுள்ளன. எனினும் இந்தக் குறும் படம், பார்ப்பவர் மனதை நெகிழ்ச்சி அடையச் செய்வதோடு மட்டுமல்லாமல் பாதிப்பு குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்துவதில் வெற்றி அடைந்துள்ளது' என்றார் தமிழ்நாடு டவுன்ஸ் சின்ட்ரோம் சங்கத்தின் தலைவர் சுரேகா ராமச்சந்திரன்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.