நாங்கள் பாகிஸ்தானியர்களை நம்புவதில்லை என்று இந்தியாவுக்கான இஸ்ரேல் தூதர் ரூவன் அஸார், திங்கள்கிழமை (ஜூன் 15) தெரிவித்துள்ளார்.
ஈரான் - இஸ்ரேல், அமெரிக்கா இடையே கடந்த பிப். 28 ஆம் தேதி தொடங்கிய போர், பேச்சுவார்த்தைகளில் முடிவு எட்டப்படாமல் இருந்த காரணத்தால் தாக்குதல்கள் தொடர்ந்து நடைபெற்று வந்தது. இதனால், உலகின் பல நாடுகளில் அத்தியாவசியப் பொருள்கள் விலை ஏற்றம் கண்டுள்ளன.
உலகளாவிய எரிசக்தி நெருக்கடியைத் தூண்டிய, இந்த 107 நாள் போரை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான ஒப்பந்தத்தை அமெரிக்காவும் ஈரானும் இறுதி செய்துள்ளதாக அமெரிக்க அதிபர் டொனல்ட் டிரம்ப் இன்று காலை அறிவித்தார்.
இந்த பேச்சுவார்த்தை முன்னெடுப்புகளில் தொடர்ந்து மத்தியஸ்தம் செய்ததன் மூலம், ஒப்பந்தம் இறுதியானதில் பாகிஸ்தான் முக்கிய பங்காற்றியுள்ளது. இறுதி ஒப்பந்தம் சுவிட்சர்லாந்தில் நடைபெறும் என பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஷ் ஷெரீஃப் அதிகாரபூர்வமாக தெரிவித்தார்.
இதுகுறித்து இந்தியாவுக்கான இஸ்ரேல் தூதர் ரூவன் அஸார் பேசியதாவது:
நான் இதை பல நேர்காணல்களில் கூறியுள்ளேன். எங்களுக்கு பாகிஸ்தானியர்கள் மீது நம்பிக்கை இல்லை. அவர்களின் செயல்பாடுகளை நாங்கள் கண்டிக்கிறோம். இஸ்ரேல் மீதான அவர்களின் அணுகுமுறை, அவர்களின் பாதுகாப்பு அமைச்சரின் யூத-விரோதக் கருத்துகள் போன்றவற்ற்றை நாங்கள் எதிர்க்கிறோம் என்று ரூவன் அஸார் தெரிவித்தார்.
Summary
Israel's Ambassador to India, Reuven Azar, stated on Monday (June 15) that they do not trust the Pakistanis.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

இடம்பெயா்வு, போலி முகவரிகளால் அங்கீகரிக்கப்படாத காலனிகளில் எஸ்ஐஆா் பணியை மேற்கொள்வதில் சிக்கல்

மு.க. ஸ்டாலினை சந்தித்த அமெரிக்க துணைத் தூதர்!

லெபனானில் இருந்து இஸ்ரேல் வெளியேற வேண்டும்

சொல்லப் போனால்... திமுக – அதிமுக கூட்டணியும் அரைகுறை உண்மையும்!
விடியோக்கள்

காவல் மரணம்; யாரையும் காப்பாற்றும் நோக்கமில்லை! அமைச்சர் நிர்மல் குமார் | TVK

இறுதிச் சுற்றில் மீண்டும் ஆர்ஜென்டினா: சண்டைக்களமாக மாறிய ஆடுகளம்! | FIFA | FIFA World Cup 2026 |

Ravindran Duraisamy interview | விஜய் அரசை அண்ணாமலை விமர்சிக்காதது ஏன்? | TVK | CM Vijay | Annamalai




