தவெக என்ன செய்தது எனக் கேட்கும் எதிர்க்கட்சித் தலைவர் என்ன சுதந்திர போராட்டத் தியாகியா? அமைச்சர் ரமேஷ்அதிமுக மூழ்கிக்கொண்டிருக்கும் கப்பல்: தவெகவுக்கு இன்னும் பலர் வருவார்கள்: செங்கோட்டையன்இந்தியாவின் மரபணுவிலேயே புதுமை: பிரான்ஸில் பிரதமர் மோடி பேச்சுசேலம் பாலியல் வன்கொடுமை வழக்கை சிபிசிஐடி விசாரணைக்கு உத்தரவிட வேண்டும்: மு. வீரபாண்டியன்5 மாவட்டங்களில் நாளை மழைக்கு வாய்ப்பு!ராகுல் காந்தி இந்தியாவின் சாதனைகளைக் குறைத்து மதிப்பிடுகிறார்: நிர்மலா சீதாராமன்
/

சென்னைக்கு இன்று வயது 375

சென்னையின் 375- வது பிறந்தநாள் வியாழக்கிழமை (ஆகஸ்ட் 22) கொண்டாடப்படுகிறது.

Updated On :22 ஆகஸ்ட் 2013, 3:55 am IST

சென்னையின் 375- வது பிறந்தநாள் வியாழக்கிழமை (ஆகஸ்ட் 22) கொண்டாடப்படுகிறது.

இதை முன்னிட்டு ஒரு வாரத்துக்கு சென்னையின் வரலாறு தொடர்பான பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன.

1639 ஆகஸ்ட் 22 -ஆம் தேதி சென்னை உருவானது. அன்றைய தினம் கிழக்கிந்திய கம்பெனியைச் சேர்ந்த பிரான் கிஸ்டே, ஆன்ட்ரூ கோகன் ஆகியோர் தங்களின் உதவியாளர் பெரிதிம்மப்பா என்பவர் உதவியுடன் செயின்ட் ஜார்ஜ் கோட்டை உள்ள இடத்தை வாங்கினர்.

இடத்தை விற்ற அய்யப்பன், வேங்கடப்பன் ஆகியோரின் தந்தை சென்னப்ப நாயக்கன் என்பவரின் நினைவாக கோட்டைக்கு வடக்கே உள்ள ஊர் சென்னப் பட்டினம் என்று அழைக்கப்பட்டது.

ஆங்கிலேயர்கள் 1639 -ஆம் ஆண்டில் செயின்ட் ஜார்ஜ் கோட்டையை கட்டியதைத் தொடர்ந்து சென்னை நகரம் உருவானது.

1646 கணக்கெடுப்பின்படி சென்னையின் மக்கள்தொகை 19 ஆயிரம். 2011-ஆம் ஆண்டு கணக்கெடுப்பின்படி சென்னையில் மக்கள்தொகை சுமார் 50 லட்சம் ஆகும்.

1947 -ஆம் ஆண்டு இந்தியா விடுதலை அடைந்த பின்பு மதராஸ் மாகாணத்தின் தலைநகரானது. சென்னை மாகாணம் 1969 -ஆம் ஆண்டு தமிழ்நாடு என பெயர் மாற்றம் செய்யப்பட்டது. நகரின் பெயரான மதராஸ் 1996 -ஆம் ஆண்டு சென்னை என பெயர்மாற்றம் செய்யப்பட்டது.

நம்ம சென்னை: சென்னையில் பிறந்த தினத்தை முன்னிட்டு பல்வேறு தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் இணைந்து "நம்ம சென்னை' என்ற தலைப்பில் சென்னை நகரின் வரலாறு தொடர்பான பல்வேறு நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்துள்ளன. சென்னை தரமணி சி.பி.டி. வளாகத்தில் உள்ள பிரஸ் இன்ஸ்டிடியூட் ஆப் இந்தியா அரங்கத்தில் சென்னை வரலாற்றை விளக்கும் ஆவணப் படங்கள் திரையிடப்படவுள்ளன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.