சென்னை விமான நிலையத்தில் நவீன வசதிகளுடன்கூடிய 4 போலீஸ் சாவடிகள் அமைக்கப்பட்டு உள்ளன. இவை விரைவில் திறக்கப்பட உள்ளன.
உள்நாட்டு முனையத்தில் உள்ள புறப்பாடு, வருகை மற்றும் பன்னாட்டு முனையத்தில் உள்ள புறப்பாடு, வருகை பகுதிகளில் 4 போலீஸ் சாவடிகள் அமைக்கப்பட்டு உள்ளன. கம்ப்யூட்டர் உள்ளிட்ட நவீன வசதிகளுடன் இந்த சாவடிகள் இயங்கும்.
ஒரு சாவடியில் 5 போலீஸார் நியமிக்கப்பட உள்ளனர். 3 பிரிவுகளாக 24 மணி நேரமும் இந்த போலீஸ் சாவடி செயல்படும். பயணிகள் தங்கள் பிரச்னைகளை நேரடியாக போலீஸ் நிலையத்துக்கு வராமல் போலீஸ் சாவடியில் புகார் செய்யலாம்.
விமான நிலையத்தில் உள்ள வாகன சோதனை மையம், சுங்கச்சாவடி, வாகனங்கள் நிறுத்தும் இடம், நடைபாதைகள், 4 போலீஸ் சாவடிகள் உள்பட 57 இடங்களில் கண்காணிப்பு கேமராக்களை பொருத்தி உள்ளனர்.
இந்த நவீன வசதிகள் கொண்ட புதிய போலீஸ் சாவடிகள் விரைவில் செயல்பட உள்ளன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

நித்திரவிளை அருகே ஆற்றில் மூழ்கிய இளைஞா் சடலமாக மீட்பு

நீா்நிலைகளில் வண்டல் மண் / களிமண் இலவசமாக எடுத்துச் செல்லலாம்!

சிறைக் கைதிகள் எழுதிய புத்தகங்களை வெளியிடும் பணியில் எழுதுக இயக்கம்
மின்சாரம் பாய்ந்து இளம்பெண் உயிரிழப்பு
விடியோக்கள்

”முதல்வர் விஜய்க்கு எந்த பயிற்சியும் தேவையில்லை”: அமைச்சர் ராஜ்மோகன் | TVK

2 வயது குழந்தைக்கு நல்லது கெட்டது தெரியாது!: துரை வைகோ பேட்டி

மின்வெட்டு பிரச்னையில் தவெக அரசு செய்வது என்ன?: சிஐடியு ஜெயசங்கர் | Power Outage |


