சென்னை மாநகர காவல் ஆணையராக அபின் தினேஷ் மோதக் பொறுப்பேற்பு!சென்னை மாநகர காவல் ஆணையர் அருண் மாற்றம்! சென்னையில் வாக்காளர் தகவல் சீட்டு வழங்கும் பணி! ஏப்.12ஆம் தேதி முதல்!சென்னையில் ஐபிஎல்: மெட்ரோ ரயிலில் இலவசமாக பயணிக்கலாம்!பச்சைத் துண்டுப் போட்டு பச்சை துரோகம் செய்தவர் பழனிசாமி: முதல்வர் ஸ்டாலின்அஸ்ஸாம் தேர்தல்! ஏப்.11-ல் மறு வாக்குப் பதிவு!மதுரா: யமுனையில் சுற்றுலாப் படகு கவிழ்ந்ததில் 10 பேர் பலி பொறியியல் கல்வியில் இரண்டு படிப்புகளுக்குக் கூடுதல் மவுசு! ஏன்?தமிழ்நாடு மகிளா காங்கிரஸ் தலைவர் விலகல்!
/

சென்னையில் நாளை சர்வதேச மின் விளக்கு கண்காட்சி தொடக்கம்

நந்தம்பாக்கத்தில் உள்ள சென்னை வர்த்தக மையத்தில் நடைபெறும் சர்வதேச மின் விளக்கு கண்காட்சியை ஆளுநர் கே. ரோசய்யா, வெள்ளிக்கிழமை (செப். 13) தொடங்கி வைக்கிறார்.

Updated On :11 செப்டம்பர் 2013, 10:19 pm

நந்தம்பாக்கத்தில் உள்ள சென்னை வர்த்தக மையத்தில் நடைபெறும் சர்வதேச மின் விளக்கு கண்காட்சியை ஆளுநர் கே. ரோசய்யா, வெள்ளிக்கிழமை (செப். 13) தொடங்கி வைக்கிறார்.

வரும் 16-ஆம் தேதி வரை மூன்று நாள்களுக்கு நடைபெறும் இந்தக் கண்காட்சிக்கு "லைட் இந்தியா இன்டர்நேஷனல் 2013' என்று பெயரிடப்பட்டுள்ளது.

தொடக்க விழாவில் கால்நடை பராமரிப்புத் துறை அமைச்சர் டி.கே.எம். சின்னையா, சென்னை மாநகராட்சி மேயர் சைதை துரைசாமி, மாநிலங்களவை உறுப்பினர் என். பாலகங்கா உள்ளிட்டோர் பங்கேற்கின்றனர். இந்திய வர்த்தக மேம்பாட்டு அமைப்பு (ஐ.டி.பி.ஓ.), தொழில், வர்த்தகத் துறை, மின்விளக்கு பொறியாளர்கள் கழகம் (ஐ.எஸ்.எல்.இ.) போன்ற அரசு சார்பு நிறுவனங்கள் இணைந்து இந்தக் கண்காட்சியை நடத்துகின்றன.

மின்விளக்கு பொறியாளர்கள் கழகம் சார்பில் தில்லி, மும்பை, இந்தூர், பெங்களூர் ஆகிய இடங்களில் மின்விளக்கு கண்காட்சி ஏற்கெனவே நடைபெற்றுள்ளது. இந்தியா மற்றும் வெளிநாடுகளைச் சேர்ந்த 150 மின்விளக்கு உற்பத்தி நிறுவனங்கள் இந்தக் கண்காட்சியில் பங்கேற்கின்றன. சீனா, ஜெர்மனி, தைவான், இத்தாலி, மலேசியா, சிங்கப்பூர், தென் கொரியா, சுவீடன், சுவிட்சர்லாந்து, அமெரிக்கா ஆகிய நாடுகளைச் சேர்ந்த நிறுவனங்களும் கண்காட்சியில் பங்கேற்க இருப்பதாக கண்காட்சியின் தலைவர் திலீப் கும்பத் தெரிவித்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.