சென்னை மாநகர காவல் ஆணையராக அபின் தினேஷ் மோதக் பொறுப்பேற்பு!சென்னை மாநகர காவல் ஆணையர் அருண் மாற்றம்! சென்னையில் வாக்காளர் தகவல் சீட்டு வழங்கும் பணி! ஏப்.12ஆம் தேதி முதல்!சென்னையில் ஐபிஎல்: மெட்ரோ ரயிலில் இலவசமாக பயணிக்கலாம்!பச்சைத் துண்டுப் போட்டு பச்சை துரோகம் செய்தவர் பழனிசாமி: முதல்வர் ஸ்டாலின்அஸ்ஸாம் தேர்தல்! ஏப்.11-ல் மறு வாக்குப் பதிவு!மதுரா: யமுனையில் சுற்றுலாப் படகு கவிழ்ந்ததில் 10 பேர் பலி பொறியியல் கல்வியில் இரண்டு படிப்புகளுக்குக் கூடுதல் மவுசு! ஏன்?தமிழ்நாடு மகிளா காங்கிரஸ் தலைவர் விலகல்!
/

மின்சாரம் பாய்ந்து 2 தொழிலாளர்கள் சாவு

சென்னையில் இரு வேறு சம்பவங்களில் மின்சாரம் பாய்ந்து இரு தொழிலாளர்கள் இறந்தனர்.

Updated On :11 செப்டம்பர் 2013, 10:21 pm

சென்னையில் இரு வேறு சம்பவங்களில் மின்சாரம் பாய்ந்து இரு தொழிலாளர்கள் இறந்தனர்.

கொல்கத்தாவைச் சேர்ந்தவர் உபுதாஸ் (26). இவர் அம்பத்தூரில் உள்ள ஒரு தனியார் கட்டுமான நிறுவனத்தில் வேலை செய்து வந்தார். இந்த நிறுவனம் அம்பத்தூர் எஸ்டேட் சாலையில் தமிழ்நாடு வீட்டு வசதி வாரியத்தின் சார்பில் புதிய வீடுகளைக் கட்டும் பணியில் ஈடுபட்டு

வருகிறது.

இந்தப் பணியில் தாஸýம் ஈடுபட்டிருந்தார். கட்டடத்தின் அஸ்திவாரம் அமைப்பதற்காக செவ்வாய்க்கிழமை அங்கு பெரிய குழிகள் தோண்டப்பட்டன. அன்று இரவு பலத்த மழை பெய்ததால், குழியில் தண்ணீர் தேங்கியதாம்.

அந்த தண்ணீரை வெளியேற்றுவதற்காக தாஸ், மோட்டாரை இயக்கினார். அப்போது அந்த மின் மோட்டாரில் ஏற்பட்ட மின்கசிவினால், தாஸ் மீது மின்சாரம் பாய்ந்தது.

பலத்த காயமடைந்த தாûஸ அங்கிருந்தவர்கள் கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்குக் கொண்டுச் சென்றனர். ஆனால் செல்லும் வழியிலேயே தாஸ் இறந்தார்.

வேளச்சேரியில் மற்றொரு சம்பவம்: வேளச்சேரி பரமேஸ்வரன் தெருவைச் சேர்ந்தவர் சிவகுமார் (32). இவர் அந்தப் பகுதியில் உள்ள ஒரு சவுண்ட் சர்வீஸ் கடையில் வேலை செய்து வந்தார். தரமணி பாரதிநகரில் 100 அடி சாலையில் உள்ள ஒரு விநாயகர் கோயிலில் அலங்கார மின் விளக்குகள் அமைக்கும் பணியில் செவ்வாய்க்கிழமை ஈடுபட்டிருந்தார். அப்போது அவர் மின்சார வயரை தொட்டதாகத் தெரிகிறது.

இதில் சிவகுமார் மீது மின்சாரம் பாய்ந்து சம்பவ இடத்திலேயே அவர் இறந்தார்.

இந்தச் சம்பவங்கள் குறித்து போலீஸார் வழக்குப் பதிவு செய்து, விசாரணை செய்து வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.