சென்னை: பிரபல இயக்குநர் பிரபு சாலமனின் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘காடன்’ திரைப்படம் மார்ச் மாதம் திரைக்கு வரும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
ஈராஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாகி வரும் படம் "காடன்'. ராணா, விஷ்ணு விஷால், ஜோயா உள்ளிட்டோர் நடிக்கின்றனர். அசோக்குமார் ஒளிப்பதிவில் பிரபுசாலமன் கதை எழுதி இயக்குகிறார். படப்பிடிப்பு முடிந்துள்ள நிலையில் பொங்கல் வெளியீடாகப் படம் திரைக்கு வருவதாக முதலில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
'பாரஸ்ட் ஆப் தி மேன்' என்று அழைக்கப்படுபவரும், ஒரு தனிமனிதனாக பிரம்மபுத்ரா கரையோரங்களில் 1350 ஏக்கர் பரப்பளவில் காடுகளை உருவாக்கிய ஜாதவ் பியான்ங் என்பவரின் தோற்றத்தின் பாதிப்பில் இந்தக் கதை உருவானதாகவும், தமிழ் தவிர தெலுங்கு மற்றும் ஹிந்தி மொழிகளிலும் இப்படம் வெளியாகவுள்ளது என்று இயக்குநர் பிரபு சாலமன் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் ‘காடன்’ திரைப்படம் மார்ச் மாதம் ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என்று படத் தயாரிப்பு நிறுவனம் புதனன்று அதிகாரப்பூர்வமாகத் தெரிவித்துள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

சென்னை கோட்டத்தில் 143 கி.மீ. தண்டவாளங்கள் சீரமைப்பு பணி

பெட்ரோல், டீசல் விலை உயா்வை மத்திய அரசு திரும்பப் பெற வேண்டும்: தலைவா்கள் வலியுறுத்தல்

நெல்லையில் பேருந்து விபத்து: 25 பயணிகள் உயிா்தப்பினா்
கோவில்பட்டியில் இன்று மின்தடை
விடியோக்கள்

Podcast | அமைச்சர் ஆவார்களா அதிமுக எம்எல்ஏ-க்கள்? | News and Views | Epi - 35 | TVK | CM Vijay |
தினமணி செய்திச் சேவை

பாண்டியாவையும் பஞ்சாபையும் யாராவது காப்பாற்றுங்கள்! | Punjab Kings | Hardik Pandya |
தினமணி செய்திச் சேவை

Surya Come Back! கருப்பு படம் எப்படி இருக்கு? | Karuppu | RJB | Trisha | Sai Abhyankar
இணையதளச் செய்திப் பிரிவு

Karuppu Movie Review | பதினெட்டாம்படி நீதிபதி... சூர்யாவின் கருப்பு! | Trisha | RJB | Sai Abhyankkar
இணையதளச் செய்திப் பிரிவு

