நடிகர் விஜய்யைச் சந்தித்த நடிகர் காளிதாஸ், அச்சந்திப்பு குறித்து ட்விட்டரில் பதிவு எழுதியுள்ளார்.
நடிகர் ஜெயராமின் மகனான காளிதாஸ், மீன் குழம்பும் மண் பானையும் என்கிற படத்தின் மூலம் தமிழ்த் திரையுலகில் அறிமுகமானார். ஒரு பக்க கதை சமீபத்தில் வெளியானது. அமேசான் பிரைமில் வெளியான புத்தம் புது காலை மற்றும் நெட்பிளிக்ஸில் வெளியான பாவக் கதைகள் ஆகிய ஓடிடி படங்களிலும் அவர் நடித்துள்ளார்.
இந்நிலையில் நடிகர் விஜய்யைச் சமீபத்தில் சந்தித்துள்ளார் காளிதாஸ். இதன் புகைப்படத்தை ட்விட்டரில் பகிர்ந்த காளிதாஸ் கூறியதாவது:
இதைவிட சிறப்பாக எதுவும் நடந்துவிட முடியாது. மாஸ்டரை மாணவன் சந்தித்துள்ளேன். எனக்காக நேரத்தைச் செலவிட்ட விஜய் சாருக்கு நன்றி எனக் கூறியுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.









