/

’வாய்தா’ திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீடு

இயக்குநர் மகிவர்மன் இயக்கத்தில் புதுமுக நாயகர் புகழ் அறிமுகமாகும் வாய்தா திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை நடிகர் விஜய் சேதுபதி வெளியிட்டார்.

News image
’வாய்தா’ திரைப்பட ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீடு
Updated On :28 ஜனவரி 2021, 1:18 pm

DIN

இயக்குநர் மகிவர்மன் இயக்கத்தில் புதுமுக நாயகர் புகழ் அறிமுகமாகும் வாய்தா திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை நடிகர் விஜய் சேதுபதி வெளியிட்டார்.

தயாரிப்பாளர் வினோத் குமார் தயாரிப்பில் மகிவர்மன் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் ‘வாய்தா’. இந்தப் படத்தில் புதுமுக நாயகனாக நடிகர் புகழ் அறிமுகமாகிறார். நாயகியாக பெளலென் ஜெசிகா நடித்துள்ளார். முன்னனி நடிகர் நாசர் முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்துள்ள இந்தத் திரைப்படத்திற்கு லோகேஸ்வரன் இசையமைத்துள்ளார்.

இயக்குநர் ராஜூ முருகன், உமாதேவி, மணி அமுதவன், நவகனி ஆகியோர் பாடல்கள் எழுதியுள்ளனர்.  இந்தத் திரைப்படத்திற்கு ஜாக்கி ஆர்ட் பணிகளிலும், நரேஷ் குணசீலன் எடிட்டராகவும், சுப்ரீம் சுந்தர் சண்டைக் காட்சிகளுக்கும் பணியாற்றியுள்ளனர். 

இந்நிலையில் இந்தத் திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை நடிகர் விஜய் சேதுபதி வியாழக்கிழமை வெளியிட்டார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.