பிக் பாஸ் எப்போது ஆரம்பமாகுமென பெரும் எதிர்பார்ப்பு நிலவிய நிலையில், பிக் பாஸ் சீசன் - 8 ஞாயிற்றுக்கிழமை ஆரம்பமாகியுள்ளது.
பிக் பாஸ் தொகுப்பாளராக முதல்முறையாக நடிகர் விஜய் சேதுபதி அறிமுகமாகியுள்ளது பார்வையாளர்களிடையே எதிர்பார்ப்பை அதிகரிக்கச் செய்துள்ளது. கடந்த 7 சீசன்களை நடிகர் கமல் ஹாசன் தொகுத்து வழங்கிய நிலையில், பிக் பாஸ் 8-ஆவது சீசனை நடிகர் விஜய் சேதுபதி தொகுத்து வழங்குகிறார்.
18 புது போட்டியாளர்களுடன் பிக் பாஸ் வீடு களைகட்டியுள்ளது. ஆனால், இம்முறை பார்வையாளர்களுக்கும் போட்டியாளர்களுக்கும் சுவாரசியத்தை ஏற்படுத்தும் விதமாக, பிக் பாஸ் தொடங்கியுள்ள 24 மணி நேரத்தில் ஒரு போட்டியாளர் வெளியேற்றப்படுவார் என்ற விஷயத்தை விஜய் சேதுபதி கூறியிருந்தார்.
இதையடுத்து பிக் பாஸ் வீட்டிலிருந்து வெளியேற்றப்படப்போவது யார்? என்கிற எதிர்பார்ப்பு பரவலாக இருந்து வந்தது. இந்த நிலையில், பிக் பாஸ் தொடங்கிய இரண்டாவது நாளிலேயே சாச்சனா வெளியேற்றப்பட்டுள்ளார்.
என்ன நடந்தது? முதல் நாளிலேயே ஆண்கள் தனி, பெண்கள் தனி என இரு பிரிவாக பிக் பாஸ் வீடு பிரிக்கப்பட்டது. அதில் ஆண்களுக்கு எந்த பக்கம், பெண்களுக்கு எந்த பக்கம் என்று தீர்மானிக்கும் இடத்தில் சாச்சனா இருந்தார்.
ஆண் போட்டியாளர்களை எலிமினேட் செய்யமாட்டோம் என உறுதியளித்தால் பெண் போட்டியாளர்களுக்கு பிக் பாஸ் வீட்டின் பெரிய அறையை விட்டுக்கொடுப்பதாக ஆண் போட்டியாளர்கள் தெரிவித்தனர். இதற்கு பெண் போட்டியாளர்களும் ஒப்புக்கொண்டனர்.
“நான் வெளியேறினாலும் பரவாயில்லை.. ஒருவேளை 24 மணி நேரத்தில் ஒரு பெண் போட்டியாளர் வெளியே போக வேண்டுமென்ற சூழல் வந்தால், அந்த போட்டியாளராக நானே இருக்கிறேன்” என கூறியிருந்தார்.
இந்த நிலையில், பிக் பாஸ் வீட்டில் உள்ள போட்டியாளர்கள் சாச்சனாவையே நாமினேட் செய்ததால் அவர் அதிரடியாக வெளியேற்றப்பட்டுள்ளார்.
பிக் பாஸில் சுவாரசியத்துக்கு பஞ்சமில்லை, சுவாரசியம் தொடரும்..
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

பிக் பாஸ் - 10 ஒளிபரப்பு எப்போது?

மணிரத்னம் - விஜய் சேதுபதி திரைப்படத்தின் படப்பிடிப்பு தொடக்கம்! எங்கு தெரியுமா?
சின்னதிரை: பிக்பாஸ் காமன் மேன்

விரைவில் நடிகர் விஜய் சேதுபதியின் டிரெயின் டீசர்!
விடியோக்கள்

கொளத்தூர் வாக்கு எந்திரங்கள் சரிபார்ப்பு! " தவறுகள் இதுவரை கண்டறியப்படவில்லை" - சமீரன் பேட்டி



