ஹிந்திப் படங்களில் நடிக்க ஆர்வம்: ப்ரியங்கா சோப்ரா
ட்விட்டரில் ரசிகர்களுடன் உரையாடினார் ப்ரியங்கா சோப்ரா.


ஆங்கிலப் படம், ஆங்கில நாடகம் என பாலிவுட்டைத் தாண்டி சாதித்துவருகிறார் 34 வயது ப்ரியங்கா சோப்ரா. இதனால் அவர் ஹிந்திப் படங்களில் நடிப்பதும் புதிய படங்களை ஒப்புக்கொள்வதும் குறைந்துவிட்டது.
ட்விட்டரில் ரசிகர்களுடன் உரையாடினார் ப்ரியங்கா சோப்ரா. அப்போது ஒரு ரசிகர் இதுகுறித்து கேள்வி எழுப்பினார். அதற்குப் பதிலளித்த ப்ரியங்கா, ஆங்கிலப் படம், நாடகங்களில் நடிப்பதால் ஹிந்திப் படங்களில் நடிக்கும் வாய்ப்பு குறைந்துவிட்டது. அடுத்த ஹிந்திப் படத்தில் நடிக்க ஆர்வமாக உள்ளேன் என்றார்.
ப்ரியங்கா சோப்ரா நடித்துள்ள பே வாட்ச் என்கிற ஆங்கிலப் படம் 2017 மே 26 அன்று வெளிவரவுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்


வீடியோக்கள்
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...