ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் ஜாமீனில் விடுவிக்கப்பட்டுள்ள 12 பேரின் ஜாமீன் ரத்து மலையாள நடிகர் திலீப் விடுதலையை எதிர்த்து கேரள அரசு உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு!அதிமுகவில் மீண்டும் இணைந்தார் வெல்லமண்டி நடராஜன்இஸ்ரேலில் இருந்து வெளியேற அமெரிக்க குடிமக்களுக்கு அறிவுறுத்தல்! கச்சத்தீவு தேவாலய திருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்கோவையில் மாணவி கூட்டுப் பாலியல் வன்கொடுமை வழக்கு: மார்ச் 7-இல் தீர்ப்பு!தேவைப்பட்டால் நடிகையின் பெயரையும் வழக்கில் சேர்ப்பேன்: விஜய்யின் மனைவி சங்கீதாபிரதமர் மோடி நாளை தமிழகம் வருகிறார்! மார்ச் 1-ல் புதுச்சேரி பயணம்!கோவை நீலாம்பூரில் முதல்வர் மு. க . ஸ்டாலின் பிரசாரம்நடிகர் விஜய்யின் மனைவி சங்கீதா விவாகரத்து கோரி நீதிமன்றத்தில் மனு தாக்கல்ஆப்கானிஸ்தானுடன் போர் - பாகிஸ்தான்பங்குச்சந்தை கடும் வீழ்ச்சி! ரூ. 5.5 லட்சம் கோடி இழப்பு!!
/

இந்த மாதம் இன்னொரு விஜய் சேதுபதி படம் வெளிவருகிறது!

அப்படி எதுவும் திட்டமிடவில்லை என்று விஜய் சேதுபதி விளக்கமளித்தாலும்...

News image
Updated On :25 ஜனவரி 2024, 4:51 am

DIN

மாதம் ஒரு விஜய் சேதுபதி படமாவது வெளிவந்துவிடுகிறது. அப்படி எதுவும் திட்டமிடவில்லை. யாராலும் அதுபோல நடித்து தொடர்ச்சியாக படங்களை வெளியிடமுடியாது என்று விஜய் சேதுபதி விளக்கமளித்தாலும் நிலைமை என்னவோ அவரைக் கண்டு ஆச்சர்யப்படும் அளவுக்குத்தான் உள்ளது.

மெல்லிசை என்று ஆரம்பிக்கப்பட்ட படம் இப்போது புரியாத புதிர் என்று புதிய பெயருடன் வெளிவர உள்ளது. விஜய் சேதுபதி, காயத்ரி நடிப்பில் ரஞ்சித் ஜெயக்கோடி இயக்கியுள்ள புரியாத புதிர் இந்த மாதம் 25-ம் தேதி வெளிவர உள்ளது. 

இது விஜய் சேதுபதி நடித்து இந்த வருடம் வெளியாகும் ஏழாவது படமாகும். இதற்கு முன்பு காதலும் கடந்து போகும், சேதுபதி, இறைவி, தர்மதுரை, ஆண்டவன் கட்டளை, றெக்க என விஜய் சேதுபதியின் 6 படங்கள் வெளிவந்துள்ளன. கே.வி. ஆனந்த் இயக்கத்தில் கவண் என்கிற படத்தில் நடித்துவருகிறார் விஜய் சேதுபதி. அந்தப் படம் டிசம்பரில் வெளியாக உள்ளது. விஜய் சேதுபதி ஏற்கெனவே நடித்து முடித்து நீண்டநாள்களாக வெளியாகாமல் உள்ள இடம் பொருள் ஏவல் படமும் இந்த வருடம் வெளியாக வாய்ப்புள்ளது. 

இதற்கு அடுத்ததாக ரேணிகுண்டா படத்தை இயக்கிய பன்னீர் செல்வம், புஷ்கர் - காயத்ரி, இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா கோகுல் ஆகிய இயக்குநர்களின் படங்களிலும் நடிக்க விஜய் சேதுபதி ஒப்பந்தமாகியுள்ளார். இதுதவிர வெற்றிமாறன் இயக்கத்தில் உருவாகி வரும் வட சென்னையிலும் முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்கிறார் விஜய் சேதுபதி. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.