பாகுபலியை கட்டப்பா கொன்றது ஏன்? ரகசியம் அறிந்த மத்திய அமைச்சர்!
பாகுபலியை கட்டப்பா கொன்றது ஏன்? இந்தக் கேள்விக்கு உங்களுக்கு விடை தெரியுமா?


பாகுபலியை கட்டப்பா கொன்றது ஏன்? இந்தக் கேள்விக்கு உங்களுக்கு விடை தெரியுமா?
என்னது, இயக்குநர் ராஜூமெளலிக்கு மட்டும்தான் அந்த ரகசியம் தெரியும் என்கிறீர்களா? இல்லையில்லை, இப்போது அந்த ரகசியம் இன்னொருவருக்கும் தெரிந்துவிட்டது. அவர் யார் என்று தெரிந்தால் நிச்சயம் ஆச்சர்யப்படுவீர்கள்.
மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்புத் துறை இணையமைச்சர் ராஜ்யவர்தன் ரத்தோருக்கு அந்த ரகசியம் தெரியுமாம். கோவாவில் நடைபெற்ற சர்வதேசத் திரைப்பட விழாவில் கலந்துகொண்ட அவர் இத்தகவலைக் கூறியுள்ளார். இதுபற்றி அவர் மேலும் கூறியதாவது:
இந்த நிறைவு விழாவில் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டுள்ள பாகுபலி இயக்குநர் ராஜமெளலி, பாகுபலியை கட்டப்பா ஏன் கொன்றார் என்கிற ரகசியத்தை என்னிடம் கூறிவிட்டார்.
அருமையான படம் தந்ததற்கு அவருக்கு நன்றி. மேலும் அந்த ரகசியத்தைச் சொன்னதற்கும் நன்றி. இதில் எந்தவொரு ஆச்சர்யமும் இல்லை. ஏனெனில் இந்த அரசாங்கத்துக்கு அனைத்தும் தெரியும். அதேபோல அவருக்கும் இந்த அரசாங்கம், ரகசியத்தைக் காப்பாற்றும் என்பது தெரியும். எனவே பாதுகாப்பாக இருக்கலாம் என்று பேசியுள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...