கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

ஏ.ஆர். ரஹ்மான் பற்றி என்னிடம் ஏன் கேட்கிறீர்கள்?: இளையராஜா

இசைக்கு எல்லைகள் கிடையாது; அதற்கு நாடுகள் தெரியாது... 

News image
Updated On :28 செப்டம்பர் 2016, 3:00 am

பிடிஐ


ஹிந்தி திரைப்படமொன்றின் படப்பிடிப்பில் பங்கேற்பதற்காக பாகிஸ்தானைச் சேர்ந்த பிரபல நடிகர்கள் ஃபாவத் கான், மஹிரா கான் ஆகியோர் இந்தியா வந்துள்ளனர். மும்பையில் தங்கி படப்பிடிப்பில் பங்கேற்று வரும் அவர்களுக்கு, 48 மணி நேரத்துக்குள் நாட்டை விட்டு வெளியேறுமாறு மகாராஷ்டிர நவநிர்மாண் சேனை கட்சியின் தலைவர்கள் வெள்ளிக்கிழமை மிரட்டல் விடுத்தனர். இதுதொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய அந்தக் கட்சியின் தலைவர் ராஜ் தாக்கரேயின் மனைவி ஷாலினி தாக்கரே மற்றும் நிர்வாகிகளில் ஒருவரான ஏமி கோப்கர் ஆகியோர், 'பாகிஸ்தான் நடிகர்கள் நாட்டை விட்டு வெளியேறாவிட்டால், மகாராஷ்டிர நவநிர்மாண் சேனையே அவர்களே வெளியேற்றும்' என்றனர்.

இசை நிகழ்ச்சிக்காக அமெரிக்காவின் வாஷிங்டன் பகுதிக்குச் சென்றிருந்த இளையராஜாவிடம் இந்த விவகாரம் குறித்து செய்தியாளர்கள் கேள்விகள் கேட்டார்கள். அதற்குப் பதிலளித்த ராஜா, இசைக்கு எல்லைகள் கிடையாது; அதற்கு நாடுகள் தெரியாது என்றார். ரஹ்மான் பற்றிய கேள்விக்குப் பதிலளித்தபோது, ரஹ்மான் பற்றி என்னிடம் ஏன் கேட்கிறீர்கள்? நீங்கள் அவரை மதிக்கிறீர்கள். உங்களுக்கு அவரைப் பற்றித் தெரியும். ஆனால் நானும் அதேபோல எண்ணவேண்டும் என எதிர்பார்க்காதீர்கள் என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.