நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

தோனி படத்தில் என்னைப் பற்றி இருக்கக்கூடாது!: நடிகை லஷ்மி ராய்

இதுபற்றி தோனி வெளிப்படையாகப் பேசியதில்லை...

News image
Updated On :27 செப்டம்பர் 2016, 8:57 am

DIN

இந்திய அணி கேப்டன் தோனியின் கிரிக்கெட் வாழ்க்கையை மையமாக முன்வைத்து உருவாக்கப்பட்டுள்ள படம், எம்எஸ் தோனி - தி அன்டோல்ட் ஸ்டோரி. தோனி வேடத்தில் சுஷாந்த் சிங் ராஜ்புத் நடித்துள்ளார். இயக்கம் - நீரஜ் பாண்டே. இந்தப் படம், செப்டம்பர் 30-ம் தேதி வெளியாகிறது.

சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தொடங்கப்பட்டபோது தோனியும் நடிகை லஷ்மி ராயும் காதலித்ததாகச் செய்திகள் வெளிவந்தன. இதுபற்றி தோனி வெளிப்படையாகப் பேசியதில்லை. இந்நிலையில் தோனி - தி அன்டோல்ட் ஸ்டோரி படத்தில் லஷ்மி ராய் தொடர்புடைய காட்சிகள் உள்ளதாகக் கூறப்படுகிறது.  

இந்தப் படம் தொடர்பாக லஷ்மி ராய் பேட்டியளித்ததாவது:  

தோனியின் படத்தில் நான் இருப்பேனா என ஏன் என்னிடம் கேட்கிறார்கள்? தோனியுடன் நான் இப்போது தொடர்பில் இல்லை. அவரும் அவர் வாழ்க்கையைப் பார்த்துச் சென்றுவிட்டார். திருமணமாகி ஒரு குழந்தையும் அவருக்கு உண்டு. அவருடைய படம் வருகிறபோது ஏன் எல்லோரும் என்னைக் கேள்வி கேட்கிறார்கள்? தோனியின் படத்தில் என்னைப் பற்றி எதுவும் இருக்காது என எண்ணுகிறேன். வாழ்க்கை வரலாறு என்பதால் அவரைப் பற்றிதான் அந்தப் படத்தில் இருக்கவேண்டும். அவருடைய உறவுகளைப் பற்றி அல்ல. எப்போதுமே இன்னொருவருடன் இணைத்துப் பேசுவதற்கு யாருமே விரும்பமாட்டார்கள் என்று கூறியுள்ளார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.