வினோத் தங்கவேல் இயக்கத்தில் யோகராஜா சின்னத்தம்பி தயாரித்துள்ள படம் யாகன். அறிமுக நாயகன் சஜன், அஞ்சனா கீர்த்தி நடித்துள்ளனர். நிரோ பிரபாகரன் இசையமைத்துள்ளார். இப்படத்தின் பாடல்கள் வெளியீட்டுவிழா இன்று பிரசாத் ஸ்டூடியோவில் நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்ட தயாரிப்பாளர் ஜே.எஸ்.கே. சதீஷ்குமார் பேசியதாவது:
தயாரிப்பாளர் சங்கத் தேர்தல் நடைபெறவுள்ள இந்த பரபரப்பான சூழலில் என்னை விழாவுக்கு அழைத்தபோது தயாரிப்பாளர் யார் என்று கேட்டேன். புதியவர் என்றார்கள். அப்படியென்றால் முதல் வேலையாகக் கலந்து கொள்கிறேன் என்று கூறினேன். ஏனென்றால் இதுவரை 18 படங்கள் தயாரித்து இருக்கிறேன் நானும் ஒரு காலத்தில் புதிய தயாரிப்பாளர்தான்.
இந்தப் படத்தில் பாடல் எழுதியுள்ள நா. முத்துக்குமார் இரண்டு தேசிய விருதுகள் பெற்றபோது நானும் அருகில் இருந்திருக்கிறேன் என்பதில் எனக்குக் கர்வம் உண்டு, பெருமையும் உண்டு. தங்கமீன்கள் படத்தில் அவர் எழுதியுள்ள 'ஆனந்த யாழை மீட்டுகிறாய்' என்னை வியாபாரத்தில் சிந்திக்க வைத்த பாடல். சினிமாவில் வியாபாரம் தெரியாமல் நிறைய தவறுகள் செய்கிறோம். இனி அதைச் செய்யக் கூடாது. இனிமேல் வியாபாரம் தெரியாமல் படமெடுக்க வரக் கூடாது என்ற அந்தப் பாடல் எண்ணவைத்தது.
தங்க மீன்களின் ஆடியோ உரிமையை ஒரு நிறுவனத்துக்குக் கொடுத்தோம். 'ஆனந்த யாழை மீட்டுகிறாய்' என்கிற ஒரு பாடல் மூலம் மட்டும் ஒன்றேகால் கோடி ரூபாய் வருமானம் தந்தது. 'ரம்மி' பாடல் ரிங் டோன் மூலமாக மட்டும் 78 லட்ச ரூபாய் வருமானம் ஈட்டியது. சினிமாவில் இப்படி எத்தனையோ கண்ணுக்குத் தெரியாத வருமானங்கள் உள்ளன. இந்தத் வணிகம் தெரியாமல் படமெடுக்கக் கூடாது:
யாரோ வியாபாரம் செய்வார்கள் என்று காத்திருக்க வேண்டாம். நாமே வணிகம் செய்யலாம் இதிலுள்ள வியாபார வாய்ப்புகள் பற்றி தெரிந்து கொள்ள வேண்டும். அது பற்றி என்னிடம் கேட்டு வருபவர்களுக்கு நான் உதவி செய்யவும் வழிகாட்டவும் தயாராக இருக்கிறேன் என்றார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

திருச்சி - தாம்பரம் இடையே நாளை (ஏப். 26) சிறப்பு ரயில்!

225 இடங்களைக் கைப்பற்றி பாஜகவை வேரறுப்போம்: திரிணமூல் காங்கிரஸ்

ஸ்ரீநகர் - லே தேசிய நெடுஞ்சாலையில் பனிச்சரிவு
சூர்யவன்ஷி 3-ஆவது அதிவேக சதம்! ஹைதராபாத் அணிக்கு இமாலய இலக்கு!
வீடியோக்கள்

கன்னக்குழியா பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

மண்டாடி படப்பிடிப்பு நிறைவு!
இணையதளச் செய்திப் பிரிவு

வெற்றி உற்சாகத்தில் ஆர்சிபி கோலி | IPL 2026 | RCB | GT | RCB VS GT | Virat kohli
தினமணி செய்திச் சேவை

வாக்கு சதவீதம் உயர்வுக்கு Vijay காரணமா?
தினமணி செய்திச் சேவை


