தேயிலைத் தோட்டத் தொழிலாளர்களுடன் ராகுல் கலந்துரையாடல்!வீட்டில் தங்க அனுமதி வேண்டும்! நீதிமன்றத்தில் விஜய்யின் மனைவி சங்கீதா இடைக்கால மனு!ஆளுநர் ஆர்.என். ரவியுடன் முதல்வர் மு.க. ஸ்டாலின் சந்திப்பு!திருச்சி மாநாட்டில் பங்கேற்க தொண்டர்களுக்கு மு.க. ஸ்டாலின் அழைப்பு!5 நாள்களுக்குப் பிறகு தங்கம் விலை சவரனுக்கு ரூ. 720 உயர்வு!அதிரடியாக வீட்டு உபயோக, வணிகப் பயன்பாட்டுக்கான சிலிண்டர் விலை உயர்வு!சமையல் எரிவாயு உற்பத்தியை அதிகரிக்க மத்திய அரசு அவசரகால உத்தரவு
/

எங்க படத் தலைப்பு 'அது' கிடையாது; மறுத்த விஜய்-அட்லீ படக்குழு!

நேற்று சமூகவலைத்தளங்களில் பெரும்பாலானோரால் பகிரப்பட்ட படி அட்லீ இயக்கத்தில் விஜய் நடித்து வரும் புதிய படத்தின் தலைப்பு...

News image
Updated On :2 ஏப்ரல் 2017, 10:38 am

DIN

சென்னை: நேற்று சமூகவலைத்தளங்களில் பெரும்பாலானோரால் பகிரப்பட்ட படி அட்லீ இயக்கத்தில் விஜய் நடித்து வரும் புதிய படத்தின் தலைப்பு 'மூன்று முகம்' அல்ல என்று அந்த படக்குழுவினர் மறுப்பு தெரிவித்துள்ளனர்.

'தெறி' படத்திற்குப் பிறகு மீண்டும் அட்லீயுடன் விஜய் இணைந்திருக்கும் புதிய படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில் விஜய்க்கு ஜோடியாக சமந்தா, காஜல் அகர்வால் மற்றும் நித்யா மேனன் என மூன்று நாயகிகள். இவர்களுடன் எஸ்.ஜே.சூர்யா, வடிவேலு உள்ளிட்ட பலரும் நடித்துள்ள இந்த படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்து வருகிறார்.

நேற்று இந்த படத்தின் தலைப்பு 'மூன்று முகம்' என்று அறிவித்து 'டிசைன் போஸ்டர்' ஒன்று சமூக வலைத்தளங்களில் அனைவராலும் பரபரப்பாக பகிரப்பட்டது.

இந்த தலைப்பு விவகாரம் குறித்து தற்பொழுது படக்குழுவினர் வெளியிட்டுள்ள தகவலில், 'படத்தின் தலைப்பு இன்னும் இறுதி செய்யப்படவில்லை. நேற்று இணையத்தில் வெளியானது ரசிகர் ஒருவரால் வடிவமைக்கப்பட்ட போஸ்டர்; அதற்கும் படக்குழுவினருக்கும் சம்பந்தமில்லை" என்று விளக்கமளித்துள்ளார்கள்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.