விளாதிகுளத்தில் 12 ஆம் வகுப்பு மாணவி பாலியல் வன்கொடுமை செய்து கொலைதிமுக கூட்டணியில் மதிமுகவுக்கு 4 தொகுதிகள் ஒதுக்கீடு!திமுக ஆட்சியில் பெண்கள் அச்சத்துடன் வாழ வேண்டிய சூழல் : பிரதமர் மோடிமத்திய அரசின் திட்டங்களை செயல்படுத்தாமல் தாமதப்படுத்துகிறது திமுக : பிரதமர் மோடி கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு: மக்கள் அச்சம் கொள்ள வேண்டாம் - பிரதமர் மோடி 4 கோடி மரங்களை நடுவதற்கு இணையாக இயற்கை எரிவாயுத் திட்டம் இருக்கும் : பிரதமர் மோடிதமிழ்நாட்டிற்கு புதிதாக 5 ரயில் சேவைகளை பிரதமர் நரேந்திர மோடி தொடக்கி வைத்தார் லெபனான் மீதான இஸ்ரேலின் தாக்குதலில் 570 பேர் கொலை! எல்பிஜி தட்டுப்பாடு: ரயில்களில் உணவு வழங்குவதில் சிக்கல்?கேஸ் தட்டுப்பாடு, தமிழர்களுக்கு சிறப்பு விமானம்... பிரதமருக்கு முதல்வர் கடிதம்!
/

வசனங்களே இல்லாமல் ஜெயம் ரவி நடித்துள்ள படம்!

ஏ.எல்.விஜய் இயக்கத்தில் ஜெயம் ரவி நடித்து வரும் புதிய படமான வனமகனில் அவருக்கு வசனங்களே கிடையாது என்றும்..

News image
Updated On :23 ஏப்ரல் 2017, 10:30 am

DIN

சென்னை: ஏ.எல்.விஜய் இயக்கத்தில் ஜெயம் ரவி நடித்து வரும் புதிய படமான வனமகனில் அவருக்கு வசனங்களே கிடையாது என்றும், வெறும் ஓசைகள் மற்றும் சைகைகள் மூலமே அவர் நடித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

பிரபல இயக்குனர் ஏ.எல்.விஜய் இயக்கத்தில் ஜெயம் ரவி நடித்து வரும் புதிய படம் ‘வனமகன்’. இப்படத்தில் சாயிஷா என்ற புதுமுகம் கதாநாயகியாக நடித்துள்ளார். இது இசையமைப்பாளர் ஹாரிஸ் ஜெயராஜின் ஐம்பதாவது படமாகும். இப்படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று சென்னையில் நடைபெற்றது.

காடு மற்றும் பழங்குடியினரை அடிப்படையாக  வைத்து உருவாகியுள்ள இப்படத்தில் ஜெயம் ரவி காட்டுவாசி  இளைஞராக நடித்துள்ளார். இப்படத்தில் அவருக்கு வசனங்களே கிடையாதாம். முழுக்க முழுக்க

வெறும் ஓசைகள் மற்றும் சைகைகள் மூலமே அவர் பேசி நடித்திருக்கிறாராம்.அவர் இதுவரை நடித்த படங்களில் இந்த படத்தின் கதாபாத்திரம் பேசும்படியாக இருக்கும் என்று படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.

இந்த படமானது வரும் மே மாதத்தில் திரைக்கு வர உள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.