எழுத்தாளர் ச.தமிழ்ச்செல்வனுக்கு சாகித்ய அகாதெமி விருது பாஜகவுடன் கூட்டணி பேச்சுவார்த்தை இல்லை; வதந்திகளை நம்ப வேண்டாம்! - தவெகஒளிப்பதிவுக்கான சிறந்த ஆஸ்கர் விருது பெற்ற முதல் பெண்! அவர் சொன்ன ரகசியம்!சிறந்த திரைப்படம் உள்பட 6 ஆஸ்கர் விருதுகளை வென்ற ஒன் பேட்டில் ஆஃப்டர் அனதர்! கதை என்ன?2026ஆம் ஆண்டுக்கான ஆஸ்கர் விருதுகள்! வெற்றியாளர்கள் முழு விவரம்!! தங்கம், வெள்ளி விலை மீண்டும் குறைவுமீண்டும் சென்னை திரும்பிய துபை விமானம் மேற்கு வங்கத்தில் தலைமைச்செயலாளர் மாற்றம்! கட்டாக் மருத்துவமனையில் பயங்கர தீ விபத்து: 10 நோயாளிகள் பலி சென்னை மாதவரத்தில் என்கவுன்டரில் ரௌடி சுட்டுக்கொலை!
/

சாஹூ படத்தில் பிரபாஸின் ஜோடி - ஷ்ரதா கபூர்!

சாஹூ படத்தில் பிரபாஸுக்கு ஜோடியாக நடிக்கும் நடிகை குறித்து பல்வேறு செய்திகள் வெளியாகின...

News image
Updated On :15 ஆகஸ்ட் 2017, 5:47 am

எழில்

பாகுபலி புகழ் நடிகர் பிரபாஸின் அடுத்தப் படம் - சாஹூ. சுஜீத் இயக்கத்தில் ரூ. 150 கோடி பட்ஜெட்டில் தமிழ், தெலுங்கு, ஹிந்தி ஆகிய மொழிகளில் உருவாகி வருகிறது. 

பெரிய பட்ஜெட் என்பதற்கு உதாரணம்: ஒரே ஒரு சண்டைக்காட்சிக்கு ரூ. 35 கோடி வரை செலவு செய்ய உள்ளார்கள். டை ஹார்ட், டிரான்ஸ்ஃபார்மர்ஸ் போன்ற படங்களின் சண்டை இயக்குநரான கென்னி பேட்ஸ், இப்படத்தில் பணியாற்றுகிறார்.

யூவி கிரியேஷன்ஸ் தயாரிக்கும் இப்படத்துக்கு இசை - ஷங்கர்-இசான்-லாய். பாகுபலி 2 படத்துக்குப் பிறகு பிரபாஸ் நடிக்கும் படம் என்பதால் சாஹூ படத்தின் மீது அதிக எதிர்பார்ப்பு உருவாகியுள்ளது. 

இந்நிலையில் சாஹூ படத்தில் பிரபாஸுக்கு ஜோடியாக நடிக்கும் நடிகை குறித்து பல்வேறு செய்திகள் வெளியாகின. தற்போது பாலிவுட் நடிகையான ஷ்ரதா கபூர் இப்படத்தின் கதாநாயகியாக அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளார்.

பிரபாஸின் முதல் ஹிந்திப் படமாக சாஹூ குறிப்பிடப்படுவதால், இது ஹிந்தியில் டப் செய்யப்படுவதற்குப் பதிலாக தெலுங்கு, தமிழ் போல ஹிந்தியிலும் தனியாகப் படமாக்கப்படுகிறது. மேலும், ஷ்ரதா கபூர் நடிக்கும் முதல் தென்னிந்தியப் படம் சாஹூ என்றும் கூறலாம். மிகப்பெரிய நடிகர்கள், தொழில்நுட்பக் கலைஞர்கள் கைகோர்த்துள்ளதால் இந்தப் படம் பாகுபலிக்கு நிகராக கவனம் பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.