சிவா இயக்கத்தில் அஜித் நடிப்பில் உருவாகியுள்ள படம் - விவேகம். இப்படத்தில் காஜல் அகர்வால், அக்ஷரா ஹாசன், விவேக் ஓபராய் உள்ளிட்ட பலர் நடித்துள்ளார்கள். வில்லன் வேடத்தில் பாலிவுட் நடிகர் விவேக் ஓப்ராய் நடித்துள்ளார். இது அவர் நடிக்கும் முதல் தமிழ்ப் படம். இந்தப் படத்தை சத்யஜோதி ஃபிலிம்ஸ் தயாரித்துள்ளது. இசை - அனிருத். விவேகம் படம் தணிக்கையில் யு/ஏ சான்றிதழ் பெற்றுள்ளது.
இந்தப் படம் கடந்த 24-ம் தேதி வெளியானது. படத்துக்குக் கலவையான விமரிசனங்கள் வெளிவந்தாலும் வசூலில் பல சாதனைகளைப் படைத்துவருகிறது.
சென்னையில் விவேகம் படம் புதிய சாதனையொன்றை படைத்துள்ளது. இதுவரை எந்தவொரு தமிழ்ப்படமும் சென்னையில் தொடர்ந்து நான்கு நாள்களாக ரூ.1 கோடி வசூலித்ததில்லை. இந்தச் சாதனையை எட்டிய முதல் படம் என்கிற பெருமையைப் பெற்றுள்ளது விவேகம். முதல் நான்கு நாள்களில் தினமும் ரூ. 1 கோடிக்கும் அதிகமாக வசூலித்துள்ளது. சென்னையில் மட்டும் 4 நாள்களில் கிட்டத்தட்ட ரூ. 5.70 கோடி வசூலித்துள்ளது.
விவேகம்: சென்னை
முதல் நாள்: ரூ. 1.21 கோடி
இரண்டாம் நாள்: ரூ. 1.51 கோடி
மூன்றாம் நாள்: ரூ. 1.52 கோடி
நான்காம் நாள்: ரூ. 1.43 கோடி
சென்னையில் பாகுபலி 2 வசூல் சாதனையையும் விவேகம் முறியடித்துள்ளது. பாகுபலி 2, வார இறுதி வசூலாக ரூ. 3.70 கோடியைப் பெற்றது. அந்த வசூலைத் தாண்டி முன்னணி நிலையை அடைந்துள்ளது விவேகம்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

சேலம் வழியாக கேரளம் சென்ற ரயிலில் கடத்தப்பட்ட 10 கிலோ கஞ்சா பறிமுதல்

குமாரபாளையம் ஜவுளி பூங்காவில் தீ விபத்து: ரூ. 30 லட்சம் பொருள்கள் சேதம்

புதுக்கோட்டை அரசு மகளிா் கல்லூரியில் அடிப்படை வசதிகள்: அமைச்சா் உறுதி

இருசக்கர வாகனங்கள் மோதல்: பெண் உயிரிழப்பு
விடியோக்கள்

Duster காரை ஓட்டிப் பார்த்து ஆய்வு செய்த முதல்வர்! | CM Vijay |



