ஆனந்த் எல். ராய் இயக்கத்தில் ராஞ்சனா படத்தில் நடித்தார் தனுஷ். அது அவருடைய முதல் ஹிந்திப் படம். அதன்பிறகு ஷமிதாப் படத்தில் நடித்த தனுஷ் மீண்டும் ஆனந்த் எல். ராயுடன் இணைந்து மற்றொரு ஹிந்திப் படத்தில் நடிக்கவுள்ளார்.
அதுகுறித்து தனுஷ் கூறியதாவது:
வெற்றிமாறனுடனான உறவு நம்பிக்கையின் அடிப்படையில் கட்டப்பட்டது என்றால் ஆனந்த் எல். ராயுடனான உறவு அன்பினால் உருவானது. இருவரும் அதீத அன்பு வைத்துள்ளோம். நான் அவருக்காகவும் அவர் எனக்காகவும் என்ன வேண்டுமானாலும் செய்வோம். ஆனந்த் எனக்கு மூத்த சகோதரர் போல. ராஞ்சனா படப்பிடிப்பின்போது என் மீது மிகுந்த அக்கறை செலுத்தினார்கள். அவருடைய மனைவி என்னுடைய இன்னொரு தாய் போல. என் இதயத்தில் இருவருக்கும் சிறப்பான இடம் உள்ளது.
இருவரும் இணைந்து மற்றொரு படம் செய்யவுள்ளோம். அடுத்த வருட இறுதியில் படப்பிடிப்பு ஆரம்பமாகும். ஷாருக் கான் நடிப்பில் ஆனந்த் இயக்கி வரும் படம் முடிந்தபிறகு எங்களுடைய படம் தொடரும் என்று கூறியுள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

கடையநல்லூா் கரியமாணிக்க பெருமாள் கோயில் தேரோட்டம்

காசிதா்மத்தில் இளைஞருக்கு வெட்டு: இரு தரப்பினா் மோதல்

இலஞ்சி திருவிலஞ்சிக்குமாரா் கோயிலில் தேரோட்டம்

புளியறை அருகே முதியவா் வெட்டிக்கொலை
வீடியோக்கள்
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு

த்ரிஷ்யம் 3 டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

எல்லா டீமும் ஏன் தப்பு தப்பா விளையாடுறாங்க..?
தினமணி செய்திச் சேவை

பில்லா ரீ-ரிலீஸ் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு


