

நடிகர் கமல்ஹாசன் நற்பணி இயக்க நிர்வாகி ஒருவரது இல்லத் திருமண வரவேற்பு விழா கோவையில் நடைபெற்றது.
இதில் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்திய நடிகர் கமல்ஹாசன் பேசியதாவது:
இதை திருமண விழாவாக நினைக்காமல் ஆரம்ப விழாவாக எண்ணுகிறேன். அரசியல் சூழலை இப்படியே விட்டு வைக்காமல் அதனை மாற்ற வேண்டியது நமது கடமை.
ஓட்டுக்காக பணம் பெற்று திருடர்களை அனுமதித்து விட்டோம். இந்த சமூகத்தின் மீதான கோபம் அதிகரித்து கொண்டே இருக்கிறது. அரசியலை மாற்ற வேண்டியது நமது கடமை.
தமிழகத்தை சுத்தமாக வைத்துக் கொள்ள தொடர்ந்து போராட வேண்டும். இது திருமண விழா அல்ல. ஆரம்ப விழா என்று கூறினார்.
மேலும், தலைமை ஏற்க தைரியம் வந்து விட்டதா என்று என்னை பார்த்து கேட்கிறார்கள். நான் கேட்கிறேன், தலைமை ஏற்க உங்களுக்கு தைரியம் வந்து விட்டதா? என்று கேள்வி எழுப்பினார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.