ஆஸ்கர் விருது விழா கோலாகலம்! தென் தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புவெனிசுலா: 7 ஆண்டுகளுக்குப் பின் அமெரிக்க தூதரகம் மீண்டும் திறப்புயாருடன் கூட்டணி? : இன்று அறிவிக்கிறார் ராமதாஸ்11 மாநிலங்களவை இடங்களுக்கு இன்று தோ்தல்குழாய் எரிவாயு இணைப்பு பெற்றவர்களுக்கு சிலிண்டர் கிடையாது: மத்திய அரசுமார்ச் 17 முதல் 22 வரை திமுக வேட்பாளர் நேர்காணல்! - துரைமுருகன்காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: கர்ப்பிணி, 2 சிறார்கள் உள்பட 12 பேர் பலி!சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

மீண்டும் நயன்தாராவுடன் ஜோடி சேரும் விஜய் சேதுபதி! 

வெற்றி படமான 'நானும் ரவுடிதான்' படத்திற்குப் பிறகு நயன்தாரா, விஜய் சேதுபதி கூட்டணி மேலும் ஒரு படத்தில் இணையவிருக்கிறது.

News image
Updated On :3 டிசம்பர் 2017, 9:32 am

DIN

சென்னை: வெற்றி படமான 'நானும் ரவுடிதான்' படத்திற்குப் பிறகு நயன்தாரா, விஜய் சேதுபதி கூட்டணி மேலும் ஒரு படத்தில் இணையவிருக்கிறது.

'டிமான்டி காலனி' திரைப்படத்தினை இயக்கியவர் அஜய் ஞானமுத்து. இவர் தற்பொழுது நயன்தாரா, அதர்வா மற்றும் பிரபல பாலிவுட் இயக்குனர் அனுராக் காஷ்யப் நடிப்பில் `இமைக்கா நொடிகள்' என்ற ஆக்ஷன் த்ரில்லர் படத்தினை இயக்கி வருகிறார்.. இப்படத்தினை கேமியோ பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. ஹிப் ஹாப் தமிழா ஆதி இசையமைத்துள்ளார். அடுத்த ஆண்டு ஜனவரியில் படம் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இப்படத்தில் அதர்வா ஜோடியாக ராஷி கண்ணா தமிழில் அறிமுகமாகிறார். அதர்வாவின் அக்காவாக பிரதான கதாபாத்திரத்தில் நயன்தாரா நடிக்கிறார். இந்த படத்தில்தான் நயன்தாராவின் கணவராக சிறப்பு தோற்றத்தில் விஜய் சேதுபதி  நடிக்கிறார்.

அவர் நடிக்கும் காட்சிகளுக்கான படப்பிடிப்பு இன்று தொடங்கியுள்ளது. விஜய் சேதுபதி - நயன்தாரா ஜோடி ஏற்கனவே 'நானும் ரவுடி தான்' படத்தில் பெரும் வரவேற்பை பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.