வைரலாகும் அஜித்-ஆத்விக் புகைப்படம்!

ஆசை படம் மூலம் அனைவரையும் கவர்ந்த நடிகர் அஜித் குமார் தனது நடிப்பால் மட்டுமல்லாமல்
வைரலாகும் அஜித்-ஆத்விக் புகைப்படம்!
Updated on
2 min read

இன்றல்ல நேற்றல்ல, சினிமா தொடங்கிய காலம் முதல் இன்றுவரை ரசிகர்கள் எனப்படுவர்கள் தங்களுடைய பிரியமான நட்சத்திரங்களின் புகைப்படங்களையும், அவர்களைப் பற்றிய செய்திகளையும், அவர்களது குடும்பத்தாரின் புகைப்படங்களையும் கண்டு மகிழ விரும்புவார்கள். இதற்கான காரணம் அந்த நட்சத்திரங்களுக்கு தங்களின் மனத்தில் நீங்காத இடத்தைக் கொடுத்துவிட்டவர்கள் அவர்கள்.

ஆசை படம் மூலம் அனைவரையும் கவர்ந்த நடிகர் அஜித் குமார் தனது நடிப்பால் மட்டுமல்லாமல் அதிரடி பேச்சுக்களாலும், குணத்துக்காகவும் அனேக ரசிகர்களைக் கவர்ந்தவர். அஜித் நடிப்பில் வெளியாகும் படங்களுக்கான எதிர்ப்பார்ப்பு எப்போதும் எக்கச்சக்கமாகவே இருக்கும். 

அஜித் தற்போது சிவா இயக்கும் விசுவாசம் பட பூஜை சமீபத்தில் நடந்தது. முதல் கட்ட படப்பிடிப்பு ஐதராபாத்தில் தொடங்கி, சென்னை உள்ளிட்ட முக்கிய பகுதிகளில் நடைபெறும் என்றனர் படக்குழுவினர்.

இந்நிலையில் சமீபத்தில் மிகவும் முக்கியமான நிகழ்ச்சியொன்றில் கலந்து கொண்டார். அது அவரது இளைய மகன் ஆத்விக்கின் பள்ளியில் நடந்த ஸ்போர்ட்ஸ் டே நிகழ்ச்சிதான்.

அஜித் தன் காதல் மனைவி ஷாலினி மீதும் குழந்தைகள் அனோஷ்கா மற்றும் ஆத்விக் மீதும் அதிகளவில் அன்பும் அக்கறையும் கொண்டவர்.

படப்பிடிப்பு நாட்களைத் தவிர்த்து மற்ற நாட்களில் அவர்களுடன் தனது நேரத்தை செலவழிப்பதையே விரும்புவார்.

சமீபத்தில் மகன் ஆத்விக் பள்ளியில் நடந்த விளையாட்டு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு ஆத்விக் பங்குபெற்ற நிகழ்ச்சிகளைக் கண்டு மகிழ்ந்தார் அஜித்.

நிகழ்ச்சி முடிந்ததும், பொறுப்பான அப்பாவாக மகனை தூக்கிக் கொண்டு வரும்போது, அங்கிருந்த ரசிகர்கள் எடுத்த சில புகைப்படங்கள் இணையத்தில் வெளியானது.

அஜித் மகனுடன் காணப்பட்ட புகைப்படங்கள் வெளியான சில மணி நேரத்தில் வைரலானது.

ஆத்விக்கை அஜித் ரசிகர்கள் 'குட்டித் தல' என்றே செல்லமாக அழைக்கின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com