தமிழ் எழுத்துக்கள் தொடர்பான வரலாற்று ஆவணப்படத்தைத் தயாரிக்கும் ஹிப்ஹாப் தமிழா!
இசையமைப்பாளரும் நடிகருமான ஹிப்ஹாப் தமிழா, தமிழ் எழுத்துகள் குறித்த வரலாற்று ஆவணப் படத்தைத் தயாரித்து வருகிறார்...


இசையமைப்பாளரும் நடிகருமான ஹிப்ஹாப் தமிழா, தமிழ் எழுத்துகள் குறித்த வரலாற்று ஆவணப் படத்தைத் தயாரித்து வருகிறார்.
இதுகுறித்து ட்விட்டரில் அவர் கூறியுள்ளதாவது:
இன்னைக்கு தமிழ் மொழியை இந்த தமிழ் எழுத்துகளை வச்சி எழுதிட்டிருக்கோம் ஆனால் தமிழ் மொழிக்கான இந்த எழுத்துகள் எங்கிருந்து உருவாகியிருக்கும்? தமிழி- தமிழ் எழுத்துகளின் வரலாற்றின் ஊடே தமிழ் மொழியின் தொன்மையையும் தமிழர்களின் திண்மையையும் வெளிக்கொணர முயலும் ஓர் புதிய முயற்சி என்று எழுதியுள்ளார்.
தமிழ் எழுத்துகளின் பரிணாம வளர்ச்சி குறித்த தமிழி என்கிற இந்த ஆவணப் படம் இணையத்தில் தொடராக வெளிவரவுள்ளது. இந்த வரலாற்று ஆவணப்படத்தை ஹிப்ஹாப் தமிழா தயாரித்து வருகிறார். இந்த ஆவணப் படம் 2018 ஏப்ரலில் வெளியிடப்படும் என்று அவர் அறிவித்துள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...