/

ஹுசைனைத் திருமணம் செய்ததால் மதம், பெயர் மாறாது: மணிமேகலை உறுதி!

நான் கோயிலுக்குச் செல்லும்போது ஹுசைன் எனக்குத் துணையாகப் பலமுறை வந்துள்ளார்...

News image
Updated On :14 டிசம்பர் 2017, 7:12 am

எழில்

பிரபல தொலைக்காட்சித் தொகுப்பாளர் மணிமேகலையும் திரைப்பட நடனக் கலைஞர் ஹுசைனும் கடந்த வாரம் திருமணம் செய்துகொண்டார்கள். 

காதலர் ஹுசைனைத் திருமணம் செய்ய தன்னுடைய தந்தை சம்மதிக்காததால் திடீரென பதிவுத் திருமணம் செய்ய நேர்ந்தது என்று ட்விட்டரில் கூறினார் மணிமேகலை. 

இதையடுத்து மணிமேகலை மதம் மாற முடிவெடுத்துள்ளதாகச் சமூகவலைத்தளங்களில் செய்திகள் வெளியாகின. ஆங்கில நாளிதழ் ஒன்றுக்கு மணிமேகலை அளித்த பேட்டியில் கூறியதாவது:

எங்கள் திருமணச் செய்திக்கு நண்பர்கள் மட்டுமல்லாமல் பலரும் வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார்கள். மத ரீதியிலான விவாதங்களும் நடைபெற்றுள்ளன. ஓர் அக்கறையில்தான் இப்படிக் கேட்டுள்ளார்கள் என்பதைப் புரிந்துகொள்கிறேன். ஆனால் மதம் மாறவேண்டும் என்கிற எண்ணம் என்னிடம் இல்லை. ஹுசைனும் அவர்களது குடும்பத்தினரும் இதுகுறித்து என்னை வற்புறுத்தவில்லை. இன்னும் சொல்லப்போனால் நான் கோயிலுக்குச் செல்லும்போது ஹுசைன் எனக்குத் துணையாகப் பலமுறை வந்துள்ளார். அவர் மேற்கொள்ளும் மதச் சேவைகளும் எனக்கு உடன்பாடுதான். என் பெற்றோர் அழகான பெயரை எனக்குச் சூட்டியிருக்கிறார்கள். எக்காரணம் கொண்டும் அதை மாற்றிக்கொள்ளமாட்டேன் என்று கூறியுள்ளார்.

Story image

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.