தமிழ்நாட்டை விட்டு தமிழ் போய்விட்டது: தங்கர் பச்சான்
புதிய போஸ்டரை ட்விட்டரில் வெளியிட்டுள்ளார் தங்கர் பச்சான். அதில்...


பல ஆண்டுகளுக்கு முன்பே இயக்குநர் தங்கர் பச்சான் இயக்கிய படம் - களவாடிய பொழுதுகள். பிரபு தேவா, பூமிகா, பிரகாஷ் ராஜ் போன்றோர் நடித்துள்ளார்கள். இசை - பரத்வாஜ். வெளியீட்டுச் சிக்கல்களால் முடங்கிக் கிடந்த படம் தற்போது வெளிவரத் தயாராகவுள்ளது. ஐங்கரன் நிறுவனம் இப்படத்தைத் தயாரித்துள்ளது.
எனது படங்களிலேயே மிகவும் தனக்குப் பிடித்த படம் களவாடிய பொழுதுகள் என தயாரிப்பாளர் கருணாமூர்த்தி கூறியுள்ளார். காதலிக்கப் போகிறவர்களுக்கு ஒரு எச்சரிக்கை. காதலித்துக் கொண்டிருப்பவர்களுக்கு ஒரு பாடம். காதலித்து முடித்தவர்களுக்கு மீண்டும் ஒரு கடந்தகால நினைவூட்டலாக இப்படத்தை படைத்திருக்கிறேன் என்கிறார் இயக்குநர் தங்கர் பச்சான்.
இந்தப் படம் இந்த வாரம் 29-ம் தேதி வெளியாகிறது. இந்நிலையில் புதிய போஸ்டரை ட்விட்டரில் வெளியிட்டுள்ளார் தங்கர் பச்சான். அதில் தமிழ்நாட்டை விட்டு தமிழ் போய்விட்டது என்கிற வாசகங்களுடன் போஸ்டர் வெளியாகியுள்ளது. இதனால் தங்கர் பச்சானின் தாய்மொழி சார்ந்த கருத்துக்கள் இந்தப் படத்திலும் இடம்பெறும் என எதிர்பார்க்கலாம்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...