நாகார்ஜுனா மகன் அகிலுக்கும், வெங்கடேஷ் மகளுக்கும் திருமணம் என்பது வதந்தி!

முன்னதாக அகிலுக்கும், தொழிலதிபர் GSK  வின் பேத்தியும், ஹைதராபாத்தின் சிறந்த ஃபேஷன் டிசைனர்களில் ஒருவருமான ஸ்ரீயா பூபாலுக்கும் நடந்து முடிந்திருந்த திருமண நிச்சயதார்த்தம் ஒன்று சில மாதங்களுக்கு முன்பாக
நாகார்ஜுனா மகன் அகிலுக்கும், வெங்கடேஷ் மகளுக்கும் திருமணம் என்பது வதந்தி!
Published on
Updated on
1 min read

நாகார்ஜூனா குடும்பத்தினருக்கும், வெங்கடேஷ் குடும்பத்தினருக்குமான பழைய பந்தம் ஒன்று மீண்டும் புனரமைக்கப் படவிருக்கிறதோ? என்ற மாயத்தோற்றத்தை ஏற்படுத்தி ஓய்ந்திருக்கிறது சமீபத்தில் அவ்விரு குடும்பத்தையும் சுற்றிச் சுழன்று கொண்டிருந்த வதந்தி ஒன்று. நடிகர் வெங்கடேஷின் தங்கையான லஷ்மி டகுபதியைத் தான் நாகார்ஜுனா முதலில் திருமணம் செய்திருந்தார். அவர்களது திருமணம் தோல்வியில் முடிந்தாலும் அவர்களது திருமணத்தின் சாட்சியாகப் பிறந்த மகன் தான் நாக சைதன்யா. நாக சைதன்யா, நடிகை சமந்தா திருமணம் அக்டோபரில் நடக்கவிருப்பதாக அறிவிப்பு வெளியான நிலையில் தற்போது நாகார்ஜுனாவின் இரண்டாவது மனைவியான நடிகை அமலாவின் மகன் அகிலுக்கும், நாகார்ஜுனாவின் முதல் மனைவியின் சகோதரரான வெங்கடேஷின் மகளுக்கும் திருமணம் என எந்த விதமான ஆதாரங்களும் இன்றி ஒரு வதந்தி அக்கட பூமியில் றெக்கை கட்டிப் பறந்தது.

முன்னதாக அகிலுக்கும், தொழிலதிபர் GSK  வின் பேத்தியும், ஹைதராபாத்தின் சிறந்த ஃபேஷன் டிசைனர்களில் ஒருவருமான ஸ்ரீயா பூபாலுக்கும் நடந்து முடிந்திருந்த திருமண நிச்சயதார்த்தம் ஒன்று சில மாதங்களுக்கு முன்பாக ரத்து செய்யப்பட்டிருந்தது குறிப்பிடத் தக்கது. அந்தத் திருமண முறிவுக்கான காரணங்கள் அறியப் படாத நிலையில் தற்போது திடீரென டகுபதி வெங்கடேஷ் மகளுக்கும், அகிலுக்கும் திருமணப் பேச்சு இருக்கிறது. நாகார்ஜுனா, லஷ்மி திருமண முறிவால் பிளவு பட்டிருந்த இரு குடும்ப உறவுகளும் இந்தத் திருமணம் மூலம் சீராகவிருக்கின்றன என்பதாக வதந்திகள் பரவிக் கொண்டிருக்கின்றன. இந்த வதந்திகளை முறியடிக்கும் விதமாக இரு குடும்பத்தைச் சேர்ந்த மூத்தவர்களும் அவ்விசயத்தை கடுமையாக மறுத்திருக்கிறார்கள். 

அகில் தற்போது தனது அடுத்த திரைப்படத்துக்கான படப்பிடிப்பு வேலைகளில் மூழ்கி இருப்பதால் இப்போதைக்கு திருமணம் குறித்து எந்த விதமான யோசனைகளும் இல்லை என அவர் தரப்பில் தெரிவிக்கப் பட்டிருக்கிறது. 24, மனம் உள்ளிட்ட திரைப்படங்களின் இயக்குனரான விக்ரம் குமார் இயக்கத்தில் அகில் நடித்துக் கொண்டிருக்கும் ரொமாண்டிக் ஜேனர் திரைப்படத்தின் தயாரிப்பாளர் நாகார்ஜுனாவே தான். தனது அன்னபூர்ணா ஸ்டுடியோ சார்பில் மகனுக்குப் பொருத்தமான கதைகளைத் தேர்வு செய்து, படத்தை தயாரிக்கும் பொறுப்பையும் ஏற்றுக் கொண்டுள்ளார் நாகார்ஜுனா!

Image courtsy: thetelugufilmnagar.com

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com