வேலையில்லா பட்டதாரி 2 படத்தின் விளம்பர நிகழ்ச்சிகளுக்காக மலேசியா சென்றுள்ள தனுஷ், அங்குத் தனது பிறந்தநாளைக் கொண்டாடியுள்ளார்.
தனுஷ், கஜோல், செளந்தர்யா ஆகிய மூவரும் வேலையில்லா பட்டதாரி 2 படத்தின் விளம்பர நிகழ்ச்சிகளில் தொடர்ந்து பங்கேற்று வருகிறார்கள். ஹைதராபாத், டெல்லி, மும்பை, மலேசியா என பல்வேறு பகுதிகளுக்கும் சென்று ரசிகர்களைச் சந்தித்து வருகிறார்கள்.
இந்நிலையில் இன்று தனது பிறந்தநாளைக் கொண்டாடும் தனுஷ், மலேசியாவில் ரசிகர்களின் அன்புமழையில் நனைந்தது குறித்து ட்வீட் செய்துள்ளார். அவர் கூறியதாவது: மலேசியாவில் ரசிகர்கள் வெளிப்படுத்திய அன்பைக் கண்டு மகிழ்ச்சி அடைந்துள்ளேன். பிறந்தநாள் பாடலை எனக்காகப் பாடியபோது மிகவும் உருகிப் போனேன். என்ன ஒரு பிறந்தநாள் என்று ட்வீட் செய்துள்ளார்.
தாணு மற்றும் தனுஷ் தயாரிப்பில் உருவாகியுள்ள வேலையில்லா பட்டதாரி 2 படத்தை செளந்தர்யா ரஜினிகாந்த் இயக்கியுள்ளார். தனுஷ், அமலா பால், கஜோல் போன்றோர் நடித்துள்ளார்கள்.
இப்படத்துக்குத் தணிக்கையில் யு சான்றிதழ் கிடைத்துள்ளது.
இந்தப் படம், தனுஷின் பிறந்தநாளான இன்று வெளியாகவிருந்தது. ஆனால் திடீரென இப்படத்தின் வெளியீடு தள்ளிவைக்கப்பட்டது. படம் வெளியாகும் நாள்தான் தனக்குப் பிறந்தநாள் என்று ஒரு ட்வீட்டில் தனது வருத்தத்தை வெளிப்படுத்தினார் தனுஷ்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

விஷம் குடித்து பெண் தொழிலாளி தற்கொலை

அரசுப் பேருந்தில் கூடுதல் கட்டணம் வசூல்: போக்குவரத்து அதிகாரிகளுக்கு அபராதம்

மனைவியுடன் தகராறு; கணவா் தூக்கிட்டுத் தற்கொலை

புதுச்சேரி அரசு சாா்பில் தியாகி அன்சாரி துரைசாமி சிலைக்கு அமைச்சா் மரியாதை
வீடியோக்கள்

உன்னை நம்பி பாடல் வெளியானது!
இணையதளச் செய்திப் பிரிவு
3 நாள்களுக்குள் ஈரான் எண்ணெய் உள்கட்டமைப்புகள் வெடிக்கும்! Trump எச்சரிக்கை
இணையதளச் செய்திப் பிரிவு

சூப்பர் ஓவரில் சொதப்பிய பூரன் | IPL 2026 | kkr vs lsg | Nicholas Pooran | Super Over
தினமணி செய்திச் சேவை

வெள்ளிச்சுடரே பாடல்!
தினமணி செய்திச் சேவை


