பகுதி நேர அரசியல்வாதி ராகுல் காந்தி! நிதின் நவீன் குற்றச்சாட்டு!ரெளடி, பாலியல் குற்றவாளிகளை பாஜக தண்டிக்கும்: மேற்கு வங்கத்தில் மோடி பிரசாரம்கேரளத்தில் கடும் வெப்பம்: பல மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை! 2027 மக்கள் தொகை கணக்கெடுப்பில் குடிமக்கள் அனைவரும் பங்கேற்க வேண்டும்: பிரதமர் மோடிவரும் 30ஆம் தேதி 6 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு தில்லியில் சுவிஸ் விமானத்தில் திடீர் தீ: 6 பயணிகள் காயம் நீட் தேர்வு நுழைவுச் சீட்டு நாளை வெளியீடு!மே 4-ல் ஆஸ்திரேலியா செல்கிறார் விஜய்?தேர்தல் எதிரொலி: விமான டிக்கெட்டுகள் விலை கடும் உயர்வு!டிரம்ப் விருந்தில் துப்பாக்கிச் சூடு! ஜனநாயகத்தில் வன்முறைக்கு இடமில்லை: பிரதமர் மோடிடிரம்ப் பங்கேற்ற இரவு விருந்தில் துப்பாக்கிச் சூடு: ஒருவர் கைது
/

ஜூன் 23: பலத்த போட்டியில் மூன்று படங்கள்!

இம்மூன்று படங்களும் ரம்ஜான் விடுமுறை வெளியீடாக ஜுன் 23 அன்று வெளிவருகின்றன. 

News image
Updated On :6 ஜூன் 2017, 5:44 am

இயக்குநர் செல்வராகவன் இயக்கத்தில் எஸ்.ஜே. சூர்யா கதாநாயகனாக நடித்துள்ள படம் - நெஞ்சம் மறப்பதில்லை. நந்திதா, ரெஜினா ஆகியோர் நடிக்கும் இந்தப் படத்துக்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ளார். இந்தப் படத்துக்குத் தணிக்கையில் யு/ஏ சான்றிதழ் கிடைத்துள்ளது. முதலில் ஏ சான்றிதழ் தான் கிடைத்தது. ஆனால் இதை எதிர்த்து மறு தணிக்கைக்கு அனுப்பினார்கள். அதில் யு/ஏ கிடைத்தது.

Story image

ஆதிக் ரவிசந்திரன் இயக்கத்தில் சிம்பு நடித்துவரும் படம் - அன்பானவன், அசராதவன், அடங்காதவன். யுவன் இசையமைத்துள்ள இப்படத்தில் ஸ்ரேயா, தமன்னா, சனாகான் போன்றோர் நடித்துள்ளார்கள். சிம்பு 3 விதமான கெட்டப்களில் நடித்துள்ளார். பலவருடங்களுக்குப் பிறகு இளையராஜா, வைரமுத்து ஆகிய இருவரும் ஒரே படத்தில் பணியாற்றியுள்ளார்கள். இந்தப் படத்தில் ரோட்டுல வண்டி ஓடுது என்கிற பாடலை இளையராஜா பாடியுள்ளார். அதேபோல படத்தின் அறிமுகப் பாடலை வைரமுத்து எழுதியுள்ளார். படத்துக்கு இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா என்பதால் இது சாத்தியமாகியுள்ளது.

பேராண்மை படத்துக்குப் பிறகு மீண்டும் பழங்குடி இனத்தைச் சேர்ந்த இளைஞனாக வனமகன் படத்தில் நடித்துள்ளார் ஜெயம் ரவி. இவர் ஜோடியாக சாயிஷா சைகல் நடித்துள்ளார். விஜய் தயாரித்து இயக்கும் வனமகன், இசையமைப்பாளர் ஹாரிஸ் ஜெயராஜின் 50-வது படம். இதன் பாடல்கள் சமீபத்தில் வெளியிடப்பட்டன.

Story image

பெரிய நடிகர்கள் மற்றும் பெரிய இயக்குநர்களின் பங்களிப்பில் உருவாகியுள்ள இம்மூன்று படங்களும் ரம்ஜான் விடுமுறை வெளியீடாக ஜுன் 23 அன்று வெளிவருகின்றன. 

பாகுபலி 2 படத்தின் வெளியீட்டுக்குப் பிறகு சிறிய பட்ஜெட் படங்களே கடந்த சில வாரங்களாக வெளிவந்தன. இந்நிலையில் இந்த மூன்று படங்களும் ரசிகர்களைக் கவர்ந்து வசூலில் பலத்த போட்டி போட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.