வித்தியாசமான கதை மற்றும் கதாபாத்திரங்கள் தேர்விற்கு பேர் போனவர் நடிகர் விஜய் சேதுபதி. இவரின் அடுத்த படமான 'ஒரு நல்ல நாள் பாத்து சொல்றேன்' இவருடைய பெயர் சொல்லும் ஒரு வித்தியாசமான படமாகும் . இது சாகசம் மற்றும் காமெடி படமாகும். இதில் இதுவரை யாருமே செய்திராத, ஒரு சுவாரஸ்யமான பழங்குடி இன தலைவராக விஜய் சேதுபதி நடித்துள்ளார். இந்த கதாபாத்திரத்திற்க்காக 8 வெவ்வேறு தோற்றங்களில் தோன்றவிருக்கிறார். இவரது நடிப்புத் திறனையும் அர்ப்பணிப்பையும் கண்டு வியந்ததாக கூறுகிறார் இப்படத்தின் இயக்குனர் ஆறுமுக குமார் .
'8 வெவ்வேறு தோற்றங்களில் விஜய் சேதுபதி இக்கதையில் கலக்கியுள்ளார். இப்படத்தின் இயக்குனராக மட்டும் இன்றி அவரது தீவிர ரசிகராகவும் அவரது நடிப்பை மிகவும் ரசித்தேன். இப்படத்தில் அவருடைய கதாபாத்திரம் மிகவும் சுவாரசியமானது மட்டுமின்றி மிகவும் சவாலானதும் கூட. இச்சவாலை அவர் மிகச் சுலபமாகவும் புத்திசாலித்தனமாகவும் கையாண்டதைக் கண்டு ஆச்சரியப்பட்டு வியந்தேன் .
'ஒரு நல்ல நாள் பாத்து சொல்றேன்' மிகச் சிறப்பாக வந்துள்ளது. படப்பிடிப்பு கிட்டத்தட்ட முடிந்துவிட்டது. விஜய் சேதுபதியின் 8 வெவ்வேறு தோற்றங்களும் அவரது ரசிகர்கள் மட்டுமின்றி அனைவரையும் கவரும். இப்படத்தின் இன்னொரு கதாநாயகனான கவுதம் கார்த்திக் சமீபத்தில் சுவைத்த தரமான வெற்றி எங்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியது . அவர் மேலும் பல உயரங்களை தொடுவர் . தமிழ் சினிமா ரசிகர்களில் ரசனையை மனதில் வைத்து கொண்டே ''ஒரு நல்ல நாள் பாத்து சொல்றேன் '' படமாக்கி உள்ளோம்' என தன்னம்பிக்கையுடன் கூறி விடைபெற்றார் இயக்குனர் திரு. ஆறுமுக குமார் .
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்

இதயங்களை உடைத்தாலும் கவலையில்லை..! இறுதிப் போட்டி குறித்து சான்ட்னர்!

சவால்களை சமாளிக்கும் மனவலிமை கொண்டவர் விருச்சிக ராசியினர்!

அதிவேக பைக்கால் விபத்து! காரின் கூரையில் விழுந்த இளைஞர்! | CBE

தமிழகத்தில் வாட்டி வதைக்கும் வெய்யில்: அதிகபட்ச வெப்பநிலை குறையும்!
வீடியோக்கள்

புருஷன் படத்தின் மேக்கிங் விடியோ!
தினமணி வீடியோ செய்தி...

#t20wc | பயம் காட்டிய பெத்தெல்: இறுதிச் சுற்றுக்கு முன்னேறியது இந்தியா! | T20 World Cup | #msdhoni
தினமணி வீடியோ செய்தி...

அதிரடியான மேற்கிந்தியத் தீவுகள்: அரையிறுதி செல்லுமா இந்தியா?
தினமணி வீடியோ செய்தி...

பழைய டெம்ப்ளேட்டுக்கு திரும்பிய இந்தியா: இனி சிங்கப் பாதை தான்!
தினமணி வீடியோ செய்தி...

