பள்ளிக் கல்வித் துறையில் 7,499 தற்காலிக பணியிடங்கள் நிரந்தரம்: அரசாணை வெளியீடுஎல்பிஜி நெருக்கடி: குழாய் எரிவாயு திட்டங்களுக்கு விரைந்து ஒப்புதல் -மாநிலங்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல் பாரத் டாக்ஸி தளத்தில் 21.34 லட்சம் போ் பதிவு: அமித் ஷா 2033-க்குள் அனைவருக்கும் மருத்துவக் காப்பீடு: நாடாளுமன்றத்தில் நிா்மலா சீதாராமன் தகவல்தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம்: மாநிலங்களுக்கு ரூ.81,500 கோடி விடுவிப்பு- மத்திய அரசு 2025-இல் 41.41 லட்சம் போலி குடும்ப அட்டைகள் நீக்கம்: மத்திய அரசுமாநிலங்களவையில் பலத்தை அதிகரிக்க பாஜகவுக்கு கைகொடுத்த வியூகம்!
/

அஸ்வின் - ஸ்வாதி வெற்றி கூட்டணியின் அடுத்த படம் 'திரி'

அஸ்வின் மற்றும் ஸ்வாதியின் வெற்றி கூட்டணியின் அடுத்த படம் 'திரி' . இவர்கள்

News image
Updated On :28 ஜூன் 2017, 10:43 am

DIN

அஸ்வின் மற்றும் ஸ்வாதியின் வெற்றி கூட்டணியின் அடுத்த படம் 'திரி' . இவர்கள் இருவரும் இதற்கு முன்பு 'இதற்கு தானே ஆசைப்பட்டாய் ' படத்தில் ஜோடி சேர்ந்து நடித்து வெற்றி பெற்றது அனைவரும் அறிந்ததே. திரியில் அஸ்வின் மற்றும் ஸ்வாதியுடன் சேர்ந்து ஜெயப்ரகாஷ், A L அழகப்பன் , டேனியல், சென்றாயன் மற்றும் அனுபமா குமார் போன்ற பிரபல நடிகர்களும் நடித்துள்ளனர். புதுமுக இயக்குனர் அசோக் அம்ரித்ராஜ் இயக்கத்தில்  இப்படத்தை Seashore Gold Productions என்கிற பட நிறுவனத்துக்காக  பால முருகன் மற்றும் பால கோபி சேர்ந்து தயாரித்துள்ளனர். 

கதாநாயகன் அஸ்வின் பேசுகையில், 'திரி ஒரு அரசியல் சார்ந்த திரில்லர் படம் . ஆனாலும் இதில் குடும்ப பந்தங்களை பற்றி அழகாக பேசப்பட்டுள்ளது. ஆக்‌ஷன் ,காமெடி, காதல் மற்றும் செண்டிமெண்ட், ஆகியவற்றை சரியான அளவில் கலந்து தந்துள்ளார் இயக்குனர். இப்படத்தில் தந்தை -மகன் உறவு பற்றி மிக யதார்த்தமாகவும் அழகாகவும் காண்பித்துள்ளார் இயக்குனர். ஜெயப்ரகாஷ் சார் எனது அப்பாவாக நடித்துள்ளார். A L அழகப்பன் சார் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். 'திரி' சில  சமுதாய அவலங்களை பற்றி பேசும் ஜனரஞ்சகமான குடும்பப் படம். இப்படித்தான் திரைக்கதைக்காக இயக்குனர் அசோக் அம்ரித்ராஜ் மிகவும் மெனக்கெட்டிருக்கிறார்.

Story image

காதல் மற்றும் காமெடி கட்சிகளும் மிக அற்புதமாக படமாக்கப்பட்டுள்ளது. எனது நடிப்பு வாழ்க்கையில் இது ஒரு முக்கியமான படமாகும் . இந்த வாய்ப்பினை எனக்கு தந்த எங்களது தயாரிப்பாளருக்கு எனது நன்றியை தெரிவித்து கொள்கிறேன். திரி ரிலீசிற்கு நாங்கள் அனைவரும் மிக ஆவலோடு காத்துக் கொண்டிருக்கிறோம்' 

திரியின் தொழில்நுட்ப அணியும் பலம் வாய்ந்தவை ஆகும். 'சதுரங்க வேட்டை 'புகழ் K G வெங்கடேஷ் ஒளிப்பதிவு செய்துள்ளார், அஜீஸ் அசோக் இசையமைத்துள்ளார் , ராஜா சேதுபதி படத்தொகுப்பு செய்துள்ளார். 'ஜூலை 7 ஆம் தேதி ரிலீஸ் ஆகா உள்ள 'திரி' மூலம் மக்கள் குடும்பமாக திரை அரங்கத்துக்கு வந்து ஆதரவளிப்பார்கள்' என நம்பிக்கையோடு கூறி விடை  பெற்றார் நாயகன் அஸ்வின்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.