
சென்னை: தான் நடிக்கும் முதலாவது ஹாலிவுட் படத்தின் படப்பிடிப்பில் கலந்து கொள்வதற்காக, நடிகர் தனுஷ் ஐரோப்பிய நாடான பெல்ஜியத்திற்கு புறப்பட்டு சென்றார்.
ரொமய்ன் பியுர்டோலஸ் என்ற பிரெஞ்சு நாவலாசிரியரின் கைவண்ணத்தில் உருவான நாவல் 'தி எக்ஸ்ட்ராடினரி ஜர்னி ஆப் தி பகிர்' . இந்த நாவலைத் தழுவி இதே பெயரிலேயே ஹாலிவுட் படம் ஒன்று உருவாகி வருகிறது. பிரபல இயக்குனர் கென் ஸ்காட் இயக்கத்தில் உருவாகி வரும் இந்த படத்தில் நடிப்பதற்காக, நடிகர் தனுஷ் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.
ஹாலிவுட்டின் புகழ் பெற்ற நடிகையான உமா த்ருமன் நடிக்கும் இந்த படத்திற்கு நிகோலஸ் ஏரேரா மற்றும் அமித் திரிவேதி (ஹிந்தி பாடல்கள்) இசையமைக்கின்றனர். இதன் முதல் கட்ட படப்பிடிப்பு மே மாதத்தில் மும்பையில் நடைபெற்றது. இதில் தனுஷ் பங்கு பெற்றார்.
இந்நிலையில் இதன் இரண்டாவது கட்ட படப்பிடிப்பு ஐரோப்பிய நாடான பெல்ஜியத்தில் நடைபெற உள்ளது. இதில் கலந்து கொள்வதற்காக நடிகர் தனுஷ் புறப்பட்டுச் சென்றார். ஆகஸ்ட் மாதம் முதல் வாரம் வரை அங்கு நடைபெறும் படப்பிடிப்பில் தனஉஷ பங்கு பெறுவார் என்றும், அதன் பின் சென்னை திரும்புவார் என்றும் அவருக்கு நெருக்கமான வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.