பிரபாஸ், ராணா டகுபதி, அனுஷ்கா, தமன்னா, சத்யராஜ், ரம்யா கிருஷ்ணன் போன்றோர் நடிப்பில் தெலுங்கு, தமிழ், மலையாளம், ஹிந்தி ஆகிய மொழிகளில் உருவான படம் - பாகுபலி. இதனை இயக்கியவர், ராஜமெளலி.
ரூ. 600 கோடி வரை வசூலித்து பல சாதனைகளைச் செய்த பாகுபலியின் 2-ம் பாகமான, 'பாகுபலி தி கன்க்ளூஷன்’ படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்துள்ளது. தற்போது இறுதிக்கட்டப் பணிகள் நடைபெற்று வருகின்றன. ஏப்ரல் 28 அன்று பாகுபலி 2 வெளிவருகிறது. கோடைக்கால விடுமுறை சமயத்தில் படம் வெளிவருவதால் முதல் பாகத்தை விடவும் அதிகம் வசூலிக்கும்
என்கிற எதிர்பார்ப்பு உருவாகியுள்ளது.
இந்நிலையில் விரைவில் பாகுபலி 2 படத்தின் டிரெய்லர் மார்ச் 16 அன்று வெளிவரவுள்ளது. சமூகவலைத்தளத்தில் நடந்த ஒரு உரையாடலில் பட இயக்குநர் ராஜமெளலியும் தயாரிப்பாளரும் இத்தகவலை வெளியிட்டுள்ளார்கள். அன்று காலை 9 மணி முதல் 10 மணி வரை ஆந்திர பிரதேசம் மற்றும் தெலங்கானா மாநிலங்களில் உள்ள திரையரங்குகளில் டிரெய்லர் வெளியிடப்படுகிறது. சமூகவலைத்தளத்தில் மார்ச் 16 அன்று மாலை 5 மணிக்கு வெளியிடப்படுகிறது.
பாகுபலி 2 - தெலுங்கு, ஹிந்தி, தமிழ், மலையாளம் ஆகிய மொழிகளில் வெளியிடப்படுகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
வெற்றி வாய்ப்பு யாருக்கு? மதுரையில் மு.க. ஸ்டாலின் பதில்!

சவரனுக்கு ரூ. 800 உயர்ந்த தங்கம்: வெள்ளி?

சல்மான் கான் - நயன்தாரா படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு!

சென்னையில் அதிநவீன வழிகாட்டி பலகைகள்! வாகன ஓட்டிகளுக்கு ஜாக்பாட்!!
வீடியோக்கள்

வாக்கு சதவீதம் உயர்வுக்கு Vijay காரணமா?
தினமணி செய்திச் சேவை

வெள்ளை அறிக்கை வேண்டும்! சிசிடிவி காட்சியை வெளியிட்ட செல்வப்பெருந்தகை! | IT RAID | Congress
இணையதளச் செய்திப் பிரிவு

வரலாறு காணாத வாக்குப்பதிவா? | N Gopalaswami Interview | TN Election 2026 | Vote percentage in tamil nadu
தினமணி செய்திச் சேவை

ஜனநாயகக் கடமையாற்றிய திரைப்பிரபலங்கள் | Tamil cine actors | TN Election 2026 |
தினமணி செய்திச் சேவை


