

புதிய முகம், பாசமலர்கள் போன்ற படங்களை இயக்கிய இயக்குநர் சுரேஷ் மேனன் இறந்துபோனதாக இன்று காலையில் செய்தி ஒன்று வெளியானது. இந்நிலையில், அத்தகவல் தவறானது என்று சுரேஷ் மேனன் தெளிவுபடுத்தியுள்ளார்.
இன்று காலை சுரேஷ் மேனன் இறந்துபோனதாக ஒரு தகவல் வெளியானது. இதனால் பலரும் பரபரப்பு அடைந்தார்கள். மலையாளத்தில் புதிய முகம் என்கிற படத்தை இயக்கிய தீபன் இறந்துபோயுள்ளார். அது தவறாகப் புரிந்துகொள்ளப்பட்டதால் நேர்ந்த குழப்பம் இது.
இந்நிலையில் இதுகுறித்து சுரேஷ் மேனன் ஃபேஸ்புக்கில் கூறியதாவது: சில தொலைக்காட்சிகளில் நான் இறந்துபோனதாகத் தகவல் வெளியாகியுள்ளது. அதை யாரும் நம்பவேண்டாம் என்று தகவல் வெளியிட்டதோடு கூடவே ஒரு புகைப்படத்தையும் வெளியிட்டுள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.