பாகுபலி 2 டிரெய்லர் வெளிவந்து சில மணி நேரங்களே ஆகியுள்ளன. அதற்குள் யூடியூப் இணையத்தளத்தில் கிட்டத்தட்ட 1.25 கோடி பார்வைகளைப் பெற்றுள்ளது.
இன்றுகாலை முதல்முதலில் தெலுங்கு டிரெய்லரை வெளியிட்டார் இயக்குநர் ராஜமெளலி. அது மாலை 4 மணி வரை அதிகபட்சமாக 76.20 லட்சம் பார்வைகளை யூடியூப் இணையத்தளத்தில் பெற்றுள்ளது.
இதன்பிறகு அவர் ஹிந்தி டிரெய்லரை வெளியிடுவார் என்று எதிர்பார்த்த தருணத்தில் தமிழ் டிரெய்லரை வெளியிட்டார். அது மாலை 4 மணி வரை 8.95 லட்சம் பார்வைகளை யூடியூப் இணையத்தளத்தில்
பெற்றுள்ளது.
பிறகு மலையாள டிரெய்லரை வெளியிட்டார். அது அதே நேரக் கணக்கில் 2.72 லட்சம் பார்வைகளை யூடியூப் இணையத்தளத்தில் பெற்றுள்ளது.
கடைசியாக ஹிந்தி டிரெய்லரை வெளியிட்டார். அது 36.53 லட்சம் பார்வைகளை யூடியூப் இணையத்தளத்தில் பெற்றுள்ளது.
பாகுபலி 2 டிரெய்லர் நிலவரம்: (மாலை 4 மணி வரை)
தெலுங்கு: 7,620,795
ஹிந்தி: 3,653,443
தமிழ்: 895,215
மலையாளம்: 272,996
மொத்தம்: 1,24,42,449
பிரபாஸ், ராணா டகுபதி, அனுஷ்கா, தமன்னா, சத்யராஜ், ரம்யா கிருஷ்ணன் போன்றோர் நடிப்பில் தெலுங்கு, தமிழ், மலையாளம், ஹிந்தி ஆகிய மொழிகளில் உருவான படம் - பாகுபலி. இதனை இயக்கியவர், ராஜமெளலி.
ரூ. 600 கோடி வரை வசூலித்து பல சாதனைகளைச் செய்த பாகுபலியின் 2-ம் பாகமான, 'பாகுபலி தி கன்க்ளூஷன்’ படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்துள்ளது.
தற்போது இறுதிக்கட்டப் பணிகள் நடைபெற்று வருகின்றன. ஏப்ரல் 28 அன்று பாகுபலி 2 வெளிவருகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

ஆடம்பர வாழ்க்கைக்கு கேஜரிவால் பழகிவிட்டார்: பர்வேஷ் வர்மா குற்றச்சாட்டு!
ஆரஞ்ச் கேப் வென்ற விராட் கோலி..! புள்ளிப் பட்டியலில் 2ஆம் இடத்துக்கு முன்னேறிய ஆர்சிபி!

சென்னையில் வாக்கு எண்ணும் மையங்களில் 4 அடுக்கு பாதுகாப்பு!

முன்னாள் இந்திய ஹாக்கி வீரர் குர்பக்ஸ் சிங் கிரேவால் காலமானார்!
வீடியோக்கள்

வாக்கு சதவீதம் உயர்வுக்கு Vijay காரணமா?
தினமணி செய்திச் சேவை

வெள்ளை அறிக்கை வேண்டும்! சிசிடிவி காட்சியை வெளியிட்ட செல்வப்பெருந்தகை! | IT RAID | Congress
இணையதளச் செய்திப் பிரிவு

வரலாறு காணாத வாக்குப்பதிவா? | N Gopalaswami Interview | TN Election 2026 | Vote percentage in tamil nadu
தினமணி செய்திச் சேவை

ஜனநாயகக் கடமையாற்றிய திரைப்பிரபலங்கள் | Tamil cine actors | TN Election 2026 |
தினமணி செய்திச் சேவை


