தமிழகம், புதுச்சேரியில் மார்ச் 21-ல் ரமலான் பண்டிகை! - தலைமை காஜி அறிவிப்புடிடிவி தினகரன் நாளை தில்லி பயணம்!வளைகுடா நாடுகளிலிருந்து 2.8 லட்சம் இந்தியர்கள் நாடு திரும்பினர்!மேற்கு வங்க தேர்தல்: பாஜகவின் 2 ஆம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு! சென்னை தென்மண்டல வானிலை மைய தலைவரானார் சிவானந்த தாமோதர பை!ஹெச்டிஎஃப்சி வங்கி தலைவர் அதானு சக்ரவர்த்தி திடீர் ராஜிநாமா!பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி! ரூ. 13 லட்சம் கோடி இழப்பு!தங்கம் விலை ஒரேநாளில் ரூ. 5,360 குறைந்தது! ஒரு கிராம் ரூ. 13,900 ஆகச் சரிவு!
/

நடிகர் கமல்ஹாசனின் சகோதரர் சந்திரஹாசன் லண்டனில் மரணம்

நடிகர் கமலஹாசனின் அண்ணன் சந்திரஹாசன் லண்டனில் உள்ள அவரது மகள் வீட்டில் நேற்று இரவு மரணம் அடைந்தார்.

News image
Updated On :19 மார்ச் 2017, 10:54 am

DIN

சென்னை: நடிகர் கமலஹாசனின் அண்ணன் சந்திரஹாசன் லண்டனில் உள்ள அவரது மகள் வீட்டில் நேற்று இரவு மரணம் அடைந்தார்.

நடிகர் கமலஹாசன் சகோதரர் சந்திரஹாசன். இவர் கமலஹாசனின் இரண்டாவது சகோதரர். மேலும் இவர்தான் கமலஹாசனின் தயாரிப்பு நிறுவனமான ராஜ்கமல் பிலிம்ஸ் இண்டர்நேஷனலின் தயாரிப்பு நிர்வாகியாகவும் இருந்தார்.

சந்திரஹாசனின் மனைவி கீதாமணி கடந்த ஜனவரி மாதம் 5-ந்தேதி சென்னையில்  உடல்நலக் குறைவால் மரணம் அடைந்தார். இதன் பிறகு சந்திரஹாசன் லண்டனில் வசிக்கும் தன்னுடைய மகள் அனுஹாசன் வீட்டில் தங்கி இருந்தார். இந்நிலையில் நேற்று இரவு அங்கு அவருக்கு திடீர் மாரடைப்பு ஏற்பட்டு உயிர் பிரிந்தது.

மறைந்த சந்திரஹாசனுக்கு அனுஹாசன், நிர்மல் ஹாசன் என்ற இரண்டு வாரிசுகள் உள்ளன. நிர்மல் ஹாசன் தற்பொழுது அமெரிக்காவில் வசித்து வருகிறார். தந்தையின் மரணத்தை தொடர்ந்து அவர் அமெரிக்காவில் இருந்து லண்டனுக்கு விரைந்து உள்ளார்.

மனைவி இறந்த இரண்டு மாதங்ககளுக்குள் அவரும் மரணம் அடைந்துள்ளது குடும்பத்தாருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சந்திரஹாசன் மரணத்திற்கு தமிழ் திரைப்பட உலகம் இரங்கல் தெரிவித்து வருகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.