/

மடோனா நடித்ததால் 50 லட்சம் ரூபாய் சேமிக்க முடிந்தது: இயக்குநர் கே.வி. ஆனந்த்

மடோனா போன்ற ஒரு கதாநாயகியை நடிக்க வைத்ததன் மூலம் 50 லட்சம் ரூபாய் சேமிக்கப்பட்டுள்ளது.

News image
Updated On :21 மார்ச் 2017, 7:32 am

கே.வி. ஆனந்த் இயக்கத்தில் விஜய் சேதுபதி, மடோனா நடித்துள்ள படம் - கவண். ஹிப் ஹாப் தமிழா இசையமைத்துள்ளார். இந்தப் படம் மார்ச் 31-ம் தேதி வெளியாகவுள்ளது.

ஆங்கில நாளிதழ் ஒன்றுக்கு கே.வி. ஆனந்த் பேட்டியளித்ததாவது:

திருட்டு டிவியும் நடிகர்களின் சம்பளமும் ஒரு படத்தின் பட்ஜெட்டிலிருந்து 50 சதவிகிதத்தை எடுத்துக்கொள்கிறது. பெரிய பட்ஜெட் படங்களின் மிகப்பெரிய பிரச்னை இதுதான். உங்களுக்கு கவண் படம் பிடிக்காமல் போனாலும் கதைக்கு ஏற்றாற்போல சரியானமுறையில் செலவிடப்பட்டிருப்பதை அறிவீர்கள். அது திரையில் நன்குத் தெரியும். மடோனா போன்ற ஒரு கதாநாயகியை நடிக்க வைத்ததன் மூலம் 50 லட்சம் ரூபாய் சேமிக்கப்பட்டுள்ளது. மடோனாவுக்கு இது இரண்டாவது தமிழ்ப் படம்தான். மிகத்திறமையான ஆனால் புதிய ஒளிப்பதிவாளரைத் தேர்வு செய்தேன். அதேபோல நான் வழக்கமாகப் பணியாற்றும் ஹாரிஸ் ஜெயராஜுக்குப் பதிலாக ஹிப்ஹாப் தமிழா படத்துக்கு இசையமைத்துள்ளார். இதன்மூலம் நான் 2 கோடி ரூபாயைச் சேமித்துக்கொடுத்துள்ளேன். அந்தத் தொகையைப் படத்துக்காகச் செலவழிக்க முடிந்தது. என் தயாரிப்பாளர்கள், பெரிய கதாநாயகி அல்லது பெரிய தொழில்நுட்பக் கலைஞர்கள்தான் வேண்டும் என்று என்னிடம் கேட்கவில்லை என்று கூறியுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.